இன்றைய பரபரப்புச் செய்திகள் 12/03/18 !

General News

* தேனி குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு.

* தேனி குரங்கணி காட்டுத்தீ குறித்த தகவல்களை பெற, தகவல் மைய எண்கள் வெளியீடு; 94450 00586 99947 93321 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

* தேனி குரங்கணி காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர்களில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.தீயை பார்த்து பயந்து ஓடியவர்கள் பள்ளத்திற்குள் விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது – தேனி ஆட்சியர் பல்லவி.

* குரங்கணி மலையில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயற்சி : மலையில் சிக்கி உள்ளவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் தேடி வருகிறது.

* காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

* குரங்கணி மலைப்பகுதி காட்டுத்தீயில் படுகாயம் அடைந்த 6 பேருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்ற 39 பேரில், இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் 17 பேருக்கு 40% காயம் ஏற்பட்டுள்ளது – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

* தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

* குரங்கணி மலையில் சிக்கியவர்களில் 4 பேர் தீயில் இருந்து தப்பி மலைப்பாதை வழியாக கேரளாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

* தீவிபத்தில் காயமடைந்த திருப்பூரை சேர்ந்த சத்திகலாவின் மகள்கள் சாதனா, பாவனா ஆகியோரை, வீட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் மறுப்பு.

* தேனி : காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9) பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

* ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்றுடன் 20 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

* காட்டு தீ ஏற்பட்ட குரங்கணி மலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு.

* குரங்கணி விபத்தில் மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் – மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்.

* தேனி : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது – தேனி ஆட்சியர் பல்லவி.

* தேனி : குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது – தேனி ஆட்சியர் பல்லவி.

* அனுமதியின் டிரெக்கிங் மேற்கொண்டதால் விபத்து நேர்ந்துள்ளது.முன் அனுமதி பெற்றிருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

* தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முகாம்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி.

* சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடல்.

* தேனி: குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற தேனி மற்றும் மதுரை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.