full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13.03.2018

* சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் சிக்கி 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி : தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி இரங்கல்.

* ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் – தமிழக அரசு.

* ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

* ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன 193 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

* அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம்.

* நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை, இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை – டேராடூனில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.

* மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்கும் : மத்திய அரசு.

* இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு : டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன்.

* வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்பது உறுதி – முக.ஸ்டாலின் பேச்சு.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவங்கிவிட்டது.காவிரி விவகாரத்தில் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள், பூச்சாண்டி வேலை மட்டுமே காட்டிக்கொண்டு இருப்பார்கள் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

* இது திராவிட நாடு இங்கு ஆரிய, பார்ப்பன அரசியல் வென்றுவிட முடியாது – திருமுருகன் காந்தி.

* வைகோ எனக்கு அண்ணன் மாதிரி, ஆனால் என்ன செய்வது அவர் பிறக்கும்போதே லவுடு ஸ்பீக்கரோடு பிறந்துவிட்டார் – அமைச்சர் ஜெயகுமார்.

* வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

* உடல்நலம் குன்றியுள்ள அமிதாப் பச்சன் நலம் பெற பிரார்த்திக்கிறேன் : நடிகர் ரஜினி.

* புதிதாக கட்சி ஆரம்பிப்பது தற்காலிக ஏற்பாடுதான்.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது எனது ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் – டிடிவி.தினகரன்.

* தேர்தலை சந்திப்பதற்காகவே மார்ச் 15ல் தற்காலிகமாக புதிய கட்சியை அறிவிக்கவுள்ளார் டிடிவி.தினகரன் – சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

* குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை : குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து சென்னை ட்ரெக்கிங் கிளப் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம்.

* தமிழகத்தில் 16ம் தேதி முதல் புதிய படப்பிடிப்பு நடைபெறாது வெளி மாநிலங்களில் நடைபெறும் படப்பிடிப்புகள் 23ம் தேதி முதல் நிறுத்தம் – தயாரிப்பாளர் சங்கம்.

* ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் : மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. கோரிக்கை.

* பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

* கார்த்தி சிதம்பரம் ஜாமீன் வழக்கு விசாரணையில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி விலகினார்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் 2019 மார்ச்சுக்குள் Wifi வசதி ஏற்படுத்த ரயில்வே திட்டம்.

* மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளம் மூலம் என்னை இணைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது நகைப்புக்குரியதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

* மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீரர்களின் உயிர் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன் : ராஜ்நாத் சிங்.

* குரங்கணி வனத்துறையிடம் அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றோம் – சென்னை டிரெக்கிங் கிளப்.

* வனத்துறையினர் மீதான புகார் ஆதாரமற்றது – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* உறுதிமொழிகளை வடகொரியா நிறைவேற்றினால் மட்டுமே அந்நாட்டு அதிபருடன் டிரம்பின் சந்திப்பு – வெள்ளை மாளிகை.

* வங்கியில் ரூ.750 கோடி மோசடி சுபிக்ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு ஜாமின் மறுப்பு – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

* ஈரோடு , நாமக்கல் , கோவை , கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை.

* சேலம்: ஏற்காடு, ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை.

* அரபிக் கடலில் புயல் உருவாகும் சூழல் : தமிழக மீனவர்கள் படகுகளுடன் லட்சத் தீவுகளில் தஞ்சம்.

* சினிமா சம்பந்தமான இசை, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடக்காது புதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது : தயாரிப்பாளர் சங்கம்