full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 13/10/17 !

* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு.

* முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் காப்பீடு உண்டு : தமிழக அரசு.

* சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு : 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

* ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது : தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு.

* ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடுவார். தேர்தல் ஆணைய விசாரணைக்குப் பிறகு இரட்டை இலை சின்னம் தினகரனுக்கே கிடைக்கும். ஆர்கே. நகரில் வெற்றி பெற்று தினகரன் முதல்வராவார் – கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி.

* டெங்கு ஒழிப்புப் பணிக்காக மத்திய அரசு குழுவிடம் ரூ.256 கோடி தமிழக அரசு கோரியுள்ளது.

* ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி எம்எல்ஏ செம்மலை மனு தாக்கல்.

* மத்திய பிரதேசத்தில் பெட்ரோலுக்கு 3%, டீசலுக்கு 5% வாட் வரி குறைப்பு : முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு.

* டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் விதித்த தடை உத்தரவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

* திருச்சியில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மீது வழக்குப்பதிவு : அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

* தீபாவளியன்று ஸ்ட்ரைக் செய்ய திட்டமிட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

* அரசியலுக்கு வருவது குறித்த அப்பாவின் முடிவு சரியாக தான் இருக்கும் – நடிகர் கமலின் மகள் ஸ்ருதி.

* பாஜக வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு.

* எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதைச் சந்திப்பதற்கு தயாராக உள்ளோம் அஞ்சமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்.

* அரசு விதித்த கட்டணத்தைத் தாண்டி ஒரு ரூபாய் கூட எந்த திரையரங்குகளிலும் வசூலிக்கப்படாது. அரசு விதித்த கட்டணத்திற்கு மேல் வசூலித்தால் புகார் அளிக்கலாம் – நடிகர் விஷால்.

* தீபாவளிக்கு முதல் நாளையும், அடுத்த நாளையும் தேசிய விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்ற மதுரை கிளை.

* திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல். திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலையளித்தால் போதும் – நடிகர் விஷால்.

* பிறமொழிப் படங்களுக்கான வரியைக் குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். மெர்சல் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியிடப்படும் – நடிகர் விஷால்.

* திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அனைத்தும் எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்யப்படும் – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.

* இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம் வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு.

* நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி வாக்கில் தொடங்கும் எனத் தகவல்.

* ஆர் கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட காரணமாக இருந்த ரூ.89 கோடி பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தலை நடத்துவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* டெங்கு பாதிப்புகளுக்கு தமிழக அரசு அளித்து வரும் சிகிச்சை திருப்தியாக உள்ளது : மத்திய குழு.

* தொடர் மழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

* நிலவேம்புவால் எதிர்ப்பு சக்தி தான் கூடும். டெங்கு குணமாகாது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

* எம்ஜிஆர் சொத்து தொடர்பான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ் கே கவுல் விலகினார்.

* தீபாவளி கொண்டாடும் வகையில் கோவை சிறை கைதிகள் 76 பேருக்கு இதுவரை பரோல் தரப்பட்டுள்ளது.

* கம்போடியாவில் தற்கொலை செய்த ரவுடி ஸ்ரீதர் உடல் நாளை மறுநாள் சென்னை கொண்டுவரப்படுகிறது.

* தீபாவளி கொண்டாட்டம் : பஞ்சாப், ஹரியானாவில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் வெடி வெடிக்க உத்தரவு.

* வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் பொதுப்பெட்டி குறைப்புக்கு எதிரான மனு தள்ளுபடி : உயர்நீதிமன்றம்.