full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 14/06/18 !

* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது – தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி.

* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – நீதிபதி சுந்தர்.

* 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை.

* காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – கபினி அணையில் இருந்து நீர் திறந்தது கர்நாடக அரசு.

* அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

* துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனு வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு – மதுரை உயர்நீதிமன்ற கிளை.

* உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் லேசான நில அதிர்வு.

* தேனி : பெரியார் அணையில் இருந்து ஜூன் 17 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு.

* கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி குடிநீர் தேவைக்காகவும் நீர் திறக்க உத்தரவு.

* ஸ்டெர்லைட் தொடர்பான அரசாணையில் திருப்தியில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – முக.ஸ்டாலின்.

* அமைச்சரவையை கூட்டி தூத்துக்குடி விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : முக.ஸ்டாலின்.

* தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை.

* உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு.

* திருவள்ளூர்: அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 6 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் – பள்ளி நிர்வாகம்.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் சில நாட்களில் முழுமையாக குணம் அடைவார் : எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு.

* சூரிய சக்தி கொள்கையின் கீழ் பம்பு செட்டுகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் – தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

* தமிழகத்தில் 13 லட்சம் குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு 4 லட்சம் பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன : துணை முதல்வர் ஓபிஎஸ்.

* மக்களுக்காக போராடும் எங்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது; ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து போராடுபவர்களின் குரலை அரசு ஒடுக்க பார்க்கிறது – நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

* நூலகங்களுக்காக கட்டப்பட்ட கட்டடங்களில் நூலகங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து நூலகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.

* தூத்துக்குடி : அனல் மின் நிலையத்தில் 4வது யூனிட் மின்மாற்றி பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

* பாமக சார்பில் தொடரப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் வழக்கு தள்ளுபடி; தேர்தல் ஆணைய நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்.

* மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு : டிராபிக் ராமசாமி வழக்கில் புதிய குழு அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

* அரசின் வருவாயை கொண்டுதான் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார். அட்சய பாத்திரம் ஒன்று அரசிடம் இருந்தால் அனைவருக்கும் அள்ளி, அள்ளி கொடுக்க முடியும் – அமைச்சர் ஜெயக்குமார்.

* வேதாந்தாவிற்கு 2-வது சவால் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் ஒடிசாவில் பழங்குடியினர் போராட்டம்.

* ராகுல்காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. பதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம் – தமிழிசை.

* ஈகைத் திருநாளாம் இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் : அன்புமணி ராமதாஸ்.

* 8 வழிச்சாலை திட்டம் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ளதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு : ஐசிஎப் பகுதியில் குளோரியிடம் 13 சவரன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.

* நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 6 ஆம் நாளாக தடை.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் விக்ரம் ஆஜர்.

* திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நாம்தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 7பேர் ஆஜர்.

* உத்தரபிரதேசம் : 2013 ஆம் ஆண்டு சஹரன்பூர் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டில் 3013 ஆண்டு என தவறாக தேதி குறிப்பிடப்பட்டதால் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விஷ்ணுகாந்த்(73) என்பவருக்கு ரூ. 13,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்க ரயில்வே அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு.

* ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.26,330 பறிமுதல் : கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் ரமணனிடம் விசாரணை.

* மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த துப்புரவு ஊழியர் வைரமணி தற்கொலை : தற்கொலைக்கு காரணமான ஒப்பந்த நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணனை கண்டித்து ராஜாஜி மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல் போராட்டம்.

* நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாள் தடை விதிப்பு.

* கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.