full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 16/02/18 !

* இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 79 பேர் விடுதலை – ஊர்க் காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

* 1892 , 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது- உச்சநீதிமன்றம்.

* வேட்பாளர்கள், சொத்து விவரங்களோடு அதை சம்பாதித்த விவரங்களையும் பிரமாண பத்திரமாக கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்.

* நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

* காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்.

* மைசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு : பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களை தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை.

* காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுத்துவிட்டது அதிமுக அரசு – முக.ஸ்டாலின்.

* உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு கர்நாடகாவிற்கு சாதகமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை – ராகேஷ் சர்மா, தமிழக வழக்கறிஞர்.

* தமிழக – கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; சூழலைப் பொறுத்து இருமாநில எல்லையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை – கிருஷ்ணகிரி ஆட்சியர்.

* தமிழகம் , கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்.

* காவிரி நதிநீர் வழக்கு: தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம்.

* குடியரசு தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்.

* காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு.

* ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் பிப்.18 முதல் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு.

* காவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசு; தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு மோடி அரசு உள்ளது. காவிரி வழக்கில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது – வைகோ.

* மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது – உச்ச நீதிமன்றம்.

* காவிரி வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். புதுச்சேரிக்கு வழங்கப்படவேண்டிய 7 டிஎம்சி நீரில் எந்த மாற்றமும் இல்லை – உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

* உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்திருங்கள். குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். நமக்குள் எப்போது சண்டை வரும் என்று காத்திருக்கிறார்கள் – நடிகர் ரஜினி காணொலி மூலம் பேச்சு.

* தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்திற்கான பங்கை குறைக்கும் உத்தரவை தமிழக பாஜக வரவேற்கவில்லை – தமிழிசை.

* அமெரிக்க தமிழர்களுக்கான அடையாள தேடலே ஹார்வார்ட் இருக்கை அமைப்பதற்கு உந்து சக்தியாக உள்ளது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

* காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு.

* 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் ஆலோசனை.

* உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு தமிழகம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். தமிழகத்தின் நிலத்தடி நீர் கணக்கிடப்பட்டு காவிரி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது : அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்.

* மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் மிகப்பெரிய தோல்வி, 95% ஊழியர்கள் பணியில் உள்ளனர். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், அதற்கு பிறகு தான் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய முடியும் – அமைச்சர் தங்கமணி.

* சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியாது – திமுக எம்எல்ஏ அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

* காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

* கந்துவட்டி கொடுமையால் குடியாத்தத்தில் கட்டிட தொழிலாளி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.

* காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக சித்தராமையா அறிவிப்பு.

* முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ் & ஈபிஎஸ் நடவடிக்கை.

* காவிரி வழக்கை சரியாக கையாளாத அதிமுக தலைமையிலான தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் – எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்.

* காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது – ஆர்கே.நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன்.

* காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது – பாமக நிறுவனர் ராமதாஸ்.

* காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரானது.காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்.

* உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் : மணியரசன் கருத்து.

* நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜிகர்தண்டா, இறைவி பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு.

* காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. காவிரிக்கு எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்றது வரவேற்கத்தக்கது – திருநாவுக்கரசர்.

* தமிழக உரிமையை மீட்க மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

* உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே உள்ளிட்டோர் ஆலோசனை.

* காவேரி தீர்ப்பு தொடர்பாக யாரும் எந்தவித கருத்தையும் ஊடகங்களிடம் தெரிவிக்கவோ பகிரவோ கூடாது என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சென்னை காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் சந்திப்பு.

* பழநி – கொடைக்கானல் சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் : பயணிகள் பீதி.

* காவிரி நீரை கர்நாடகா கொடுக்காததும், இதில் மத்திய அரசு தலையிடாததும் தான் இந்த நிலைமைக்கு காரணம் – தமாகா தலைவர் வாசன்.

* ஆந்திரா : சித்தூர் மாவட்டம் பலமனேரியில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.