full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/05/18 !

* கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா : எடியூரப்பாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா.

* ஜம்மு காஷ்மீர் : சம்பா மற்றும் ஹிராநகர் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு.

* பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்து – ராகுல் காந்தி.

* பிடதி விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேருந்தில் புறப்பட்டனர் : ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டம் என்று தகவல்.

* நான் எடியூரப்பாவாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன் – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

* இன்று பாஜக வெற்று வெற்றியை கொண்டாடுகிறது ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு இந்தியா துயரப்படுகிறது – ராகுல் காந்தி.

* பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கில் தொடர்பு : இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு.

* ஆர்.ஜே.பாலாஜியுடன் எனது பயணம் தொடரும் – நாஞ்சில் சம்பத்.

* பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.

* காவிரி பிரச்சினை தொடர்பாக கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பங்கேற்காது.

* இன்று நடைபெறுவதாக இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு.