full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/11/17 !

* தமிழக மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 8 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் – ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி.

* மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

* மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ளனர் – தேர்வுத்துறை அறிவிப்பு.

* பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் சுங்கத்துறையின் சென்னை மண்டல இணையதளம் முடக்கம்.

* இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை : உயர்நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* உடலுறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்.

* தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும். 2-வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் : இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்வதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நவம்பர் 22 ஆம் தேதி திமுக ஆர்பாட்டம் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

* மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

* மணல் கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

* இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் கமல் ஒரு கோழை. கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாவார் – ஹெச் ராஜா., பாஜக.

* யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினரைக் கண்டு வியந்திருப்பார் : தமிழிசை சவுந்தரராஜன் கருத்து.

* அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்ற வேண்டும் – தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

* புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – வியாபாரிகளின் மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* காஷ்மீரின் பூஞ்ச் எல்லை அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.

* பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

* வருமான வரித்துறை சோதனை: பாஜகவிற்கு கட்டுப்படாதது காரணமாக இருக்கலாம் – டிடிவி தினகரன்.

* தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

* ஆதார் தொடர்பாக தனிநபர் தாக்கல் செய்யும் மனுக்களை அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும். ஆதார் வழக்குகளை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

* 50 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை, இந்த பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை, அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை வலியுறுத்தல்.

* இந்துக்களால் தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து.

* மீனவர்களின் நலனைக் காப்பதில் அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. – அமைச்சர் ஜெயக்குமார்

* இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்.

* உத்தரப்பிரதேசத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை : ஷிவக்குமாரின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்.

* ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் மு க ஸ்டாலின் நிறுத்தச் சொல்லும் அளவுக்கு ஆளுநரின் ஆய்வு மக்கள் விரோதப் போக்கு அல்ல : தமிழிசை சவுந்தரராஜன்.

* ஆளுநர் ஆய்வு செய்வதை வரவேற்றால், அமைச்சர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான் – தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.

* கேரளா: 1 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, 14 மணி நேரம் செல்லக்கூடிய 500 கிமீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஆம்புலன்ஸ் டிரைவர் சமீம்.

* ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தன்னை அடிக்கடி ஆய்வுக்குட்படுத்தி, அவமானப்படுத்தியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் பதிவு.

* புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய பாலிசியை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு முன்நிலை மற்றும் முக்கிய நிலை புற்றுநோயை உள்ளடக்கியது.

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.

* சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்.

* தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா ? பாஜக ஆட்சியில் இந்திய கடலோர காவல்படையே மீனவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது – திருமாவளவன்.

* ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை; ஆளுநர் தமது வரம்புக்கு உட்பட்டே ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டார் : தமிழிசை.

* சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே காரையூரில் பெருமாள் கோயில் கருவறையில் 13 ம் நுாற்றாண்டு கல்வெட்டுகளில் சடையவர்மன் சுந்தரபாண்டின் காலத்தில் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை தெரியவந்துள்ளது.

* திருவண்ணாமலை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி : மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

* குற்றவாளிகளைக் கண்டறியும் செல்போன் செயலி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம்.

* குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. ராஜ்கோட் மேற்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி போட்டியிடுகிறார்.

* நவ.21ல் வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம்.

* தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்