full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 !

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு.

* எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர்.

* திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

* குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்.

* குஜராத் இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து.

* குஜராத் , இமாசலபிரதேச வெற்றியை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.

* இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தொகுதிக்கு 7 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்தது ஆர் கே நகரில் தான் – தேர்தல் ஆணையம்.

* ஆர் கே நகர் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்.

* குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வாழ்த்து.

* இரு மாநில பாஜகவின் வெற்றி, தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – முக.ஸ்டாலின்.

* தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.நேர்மையாக, நியாயமாக தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* குஜராத் தேர்தல் : பாஜக – 22, காங்கிரஸ் – 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ் : வெற்றிக்கொடி நாட்டி அரியாசனத்தில் அமர்கிறது பாஜக.

* இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வியடைந்துள்ளார். இதனால் அங்கு முதல்வர் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

* முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு ஓபிஎஸ் , ஈபிஎஸ் தான் காரணம் -முக.ஸ்டாலின்.

* ஆர் கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் எஸ்பி.வேலுமணி.

* குஜராத்தின் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி வெற்றி.

* என்னை தோற்கடிக்க அதிமுக , பாஜக , தேர்தல் ஆணையம் கூட்டணி – டிடிவி.தினகரன்

* ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

* பாஜக குஜராத் மட்டுமில்லாமல் இமாச்சலிலும் ஆட்சியமைக்கும் – பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ்.

* நரேந்திர மோடி 3 முறை வென்ற மணிநகர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் பட்டேல் 75,199 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.

* குஜராத், இமாச்சல் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றி : அதிமுக எம்பி மைத்ரேயன்.

* ஆர்கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேரடி ஒளிபரப்பு : தேர்தல் ஆணையம் தகவல்.

* குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

* நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து சென்றார்.

* சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன், ஆர்கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விகரம் பத்ரா ஆலோசனை.

* ஆர்கே.நகரில் இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 30.48 லட்சம் பறிமுதல். ஆர்கே.நகரில் நாளை மாலை 5 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற்றப்படுவர் – சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன்.

* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி கூறிய கருத்திற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரசார் அமளி – அவை நாளை வரை ஒத்திவைப்பு.

* குஜராத்தில் 1.9 சதவீதம் வாக்குகள் பெற்று நோட்டா 4-ம் இடம்.

* குஜராத் வத்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி.

* காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளனர் – உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

* மும்பையில் சாகி நாகா பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

* குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் எதிரொலி : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின.

* சேலம் ஓமலூர் அருகே திண்டமங்கலத்தில் தூய்மை இந்தியா பேரணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

* காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் புதுமுகங்களுக்கு இடமளிக்கப்படும் – ராகுல் காந்தி.

* விலங்குகளுக்கு ஆதரவான கொள்கைகளை பரப்பிவரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பீட்டா அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

* சிறுமி ஹாசினி கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை டிசம்பர் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு : வழக்கு விசாரணைக்காக தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

* 30வது நினைவு நாளையொட்டி 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலரஞ்சலி – அதிமுக.

* மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பும் நடக்கிறது.ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரஞ்சலி – அதிமுக.

* மேட்டூர் அணை உபரி நீர் குட்டையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.

* போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க நவடிக்கை : பேருந்து கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரை.

* அமைந்தகரையில் செல்போன் திருடனை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து : தற்கொலைக்கு முயன்ற இளைஞரும் காயம்.