இன்றைய முக்கியச் செய்திகள் 19/03/18 !

General News

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்பிக்கள் போராட்டம்.

* 2ஜி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்.

* எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால் அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது – ராணுவ தலைமை தளபதி பிபின்.

* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெரிய பிரச்னை என்றால் தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் பெரிய பிரச்னை – அதிமுக எம்பி வேணுகோபால்.

* ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனின் 15 நாள் பரோல் நிறைவடைந்ததை அடுத்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

* ஆருஷி கொலை வழக்கில் அவரது பெற்றோரின் விடுதலைக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

* கால்நடை தீவன 4-வது வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு.

* பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது – தமிழக முதல்வர்.

* காவிரிக்கும், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து பிரச்சனைக்கும் தொடர்பில்லை ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட வேண்டாம் – ஓபிஎஸ்.

* தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது. உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி, உலகம் உள்ளவரை தழைத்தோங்கும் – தமிழ் மொழியை பாஜக நசுக்க பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.

* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு.

* வாக்குச் சீட்டு முறை கொண்டு வந்தாலும், காங்கிரஸ் கட்சியால் டெபாசிட் வாங்க முடியாது – தமிழிசை சௌந்தரராஜன்.

* ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற தடை கோரிய மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து வழக்கு விசாரணையை ஏப்.9க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

* திருச்சி பெண் உஷா உயிரிழக்க முக்கிய காரணம் அவரது கணவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுதான் : சென்னை உயர்நீதிமன்றம்.

* டெல்லியில் மார்ச் 23-ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக-வின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 28ம் தேதி ஆஜராக 7 மருத்துவர்களுக்கு சம்மன்.

* மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்க வரும் 29ஆம் தேதி வரை காத்திருப்போம் – ஓபிஎஸ்.

* திராவிடம் இந்து விரோதம் அல்ல; சிலர் திராவிடம் என்ற பெயரில் இந்து விரோதம் செய்கின்றனர் – மன்னார்குடி ஜீயர்.

* அரசியல் பயணத்தில் ரஜினி- கமல் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் ஆண்டாள் குறித்த கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் – மன்னார்குடி ஜீயர்.

* மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே, அதிமுக எம்பிக்கள் அவையை முடக்குகிறார்கள் என்றே தெரிகிறது – சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ்.

* டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ரோஹின்கியா முஸ்லீம்கள் அகதிகள் முகாம்களின் தரத்தினை உயர்த்த கோரிய மனு மீது விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* “லிங்காயத்” சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்தது கர்நாடகா அரசு.

* ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ரங்கராஜ மகா தேசிக ஜீயர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

* தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.