full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 20/12/17 !

* ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு.

* அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் வீடியோவை வெளியிட்டார் டிடிவி.தினகரன் ஆதவாளர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல்.

* ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் – அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கம்.

* ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியீட்டில் விதிமீறல் இல்லை – தேர்தல் ஆணையம்.

* பீகார் ரெயில் நிலையத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர் 2 ரெயில்வே அதிகாரிகள் கடத்தப்பட்டு உள்ளனர்.

* வெளியிடப்பட்ட வீடியோ ஜெயலலிதா தீவிர சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவதால் வீடியோவை வெளியிட்டேன் – வெற்றிவேல்.

* மேல்சிகிச்சைக்கு ஜெ.வை எங்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும் உள்ளது. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும் நாங்கள் விடமாட்டோம் – வெற்றிவேல்.

* விசாரணை ஆணையம் கேட்டால் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை கொடுப்போம். தேர்தலுக்கும் ஜெயலலிதா வீடியோ வெளியானதற்கும் தொடர்பில்லை – டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

* ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்களும் உள்ளன – தராசு ஷ்யாம்.

* மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவே வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது – தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ.

* ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை தீர்க்கவே வீடியோ வெளியிட்டப்பட்டுள்ளது – டிடிவி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்.

* ஜெயலலிதா வீடியோ தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறல் : சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்.

* வீடியோவில் இருப்பது ஜெயலலிதாவா என மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் சிவி.சண்முகம்.

* ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் எம்சி.சம்பத்.

* நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் வீடியோவை வெளியிட்டது ஏன் ? : தமிழிசை சவுந்தரராஜன்.

* சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஜெ. சிகிச்சை வீடியோ வெளியீடு – சி ஆர் சரஸ்வதி

* போயஸ் கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதா ஏன் காப்பாற்றப்படவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு – தமிழக முதல்வர் தரப்பு கே சி பழனிசாமி.

* ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்று வெளியான வீடியோ முற்றிலும் பொய்யானது – அதிமுக, முருகுமாறன்.

* மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்டதாக, மருத்துவமனை தெரிவித்த நிலையில் தற்போது வெளியான வீடியோவை, நம்ப முடியவில்லை. வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் – பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

* ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ அப்போலோவா ? போயஸ் இல்லமா ? என்ற கேள்வி எழுகிறது – திருமாவளவன்.

* தேர்தலை கருத்தில் கொண்டே வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆதாரம் இருக்கும் பட்சத்தில் விசாரணை கமிஷனிடம் கொடுக்காதது ஏன் ? அமைச்சர்கள் பேசிய வீடியோக்கள் இருந்தால் வெளியிட வேண்டியது தானே- அமைச்சர் சிவி.சண்முகம்.

* பெரியபாண்டியனை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் தவறுதலாக ஆய்வாளர் முனிசேகர் சுட்டார். பெரியபாண்டியனை காப்பாற்றும் முயற்சியில் சுட்டதாக முனிசேகர் ஒப்புதல் வாக்குமூலம் – ராஜஸ்தான் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்.

* முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலாகிருஷ்ணனிடம் நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் விசாரணை.

* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம்.

* பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா ராஜ் மயங்கி விழுந்தார் : தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

* சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்படுகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்.

* தூத்துக்குடி : மில்லர்புரத்தில் சாலைத்தடுப்புச் சுவரில் மோதி ஆயுதப்படை காவலர் சிவமுருகனின் இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி.

* சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்துக்கு வழங்கப்பட்ட, அச்சு இயந்திரத்தை தலைமை நீதிபதி, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தனர்.

* பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியில், காட்டு யானைகள் வருவதை தடுக்க, கும்கி யானைகள் உதவியுடன் தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

* தமிழத்தில் வரும் ஜனவரி 28ம் தேதி முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இந்த முறை வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* பெங்களூருவில் வட்டி பணம் கொடுக்காத தனியார் பள்ளி பெண் நிர்வாகியை பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

* மும்பையில் இன்று முதல் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.