இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/10/2017

General News

* தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இன்று 3 பேர் உயிரிழப்பு.

* நடிகர் விஜய் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தால், மருத்துவர்கள் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கத் தயார் – இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் டிஎன்.ரவிசங்கர்.

* காங்கிரஸ் ஆட்சி துணையோடு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல் ? : தமிழிசை.

* பேச்சு , படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும். ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது – முக.ஸ்டாலின்.

* அரசுக்கு ஆதரவாகவே திரைப்படங்களை தயாரிக்கலாம் என சட்டம் இயற்றப்படலாம் – மெர்சல் தொடர்பாக ப.சிதம்பரம் கருத்து.

* எம்பி , எம்எல்ஏக்களை அரசு ஊழியர்கள் எழுந்து நின்று வரவேற்கவேண்டும் – உ பி முதல்வர் அறிவிப்பு.

* தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யவேண்டாம்.மோடி அவர்களே சினிமா என்பது தமிழர்களின் மொழி, கலாச்சாரம் .மெர்சல் விவகாரத்தில் மோடி தலையிடக்கூடாது : ராகுல் காந்தி.

* உண்மைக்கு புறம்பான விசயங்களை பேசுவது தவறு. இந்தியாவையும் , சிங்கப்பூரையும் ஒப்பிட்டு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது – பொன்.ராதாகிருஷ்ணன்.

* பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது. இரட்டை இலை யாருக்கு கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக. திமுகவுக்கு ஆதரவாக அதிமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

* மெர்சல் திரைப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி.

* வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

* அர்ச்சகர்களை மணம் முடிக்க 3 லட்சம் உதவித்தொகை : தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு.

* போதைப்பொருள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாக பெரு மாறியுள்ளது.

* பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் தற்போது பாஜக தலைவர்கள் இருப்பதாக முத்தரசன் விமர்சனம்.

* மோடி இருக்கும்வரை யாரும் மிரட்டமுடியாது என ராஜேந்திரபாலாஜி கூறியதற்கு , அதிமுகவை அடக்குவதற்கு மோடிக்கு எப்படி தைரியம் வந்தது என ஏகே.போஸ் கேள்வி.

* மெர்சல் படத்தின் வசனங்களை நீக்க சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டல் என விஷால் கருத்து

* புதுச்சேரி – கடலூர் ரூ.5 கோடி மதிப்பில் இணைப்புப்பாலம் கட்டப்படும் – பொதுமக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உறுதி.

* மகாராஷ்ட்ரா : சாங்லி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு.

* மெர்சல் பட விவகாரம் : நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

* ரூ.50,000 லஞ்சம் வாங்கிய விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் முகுந்தன் லஞ்ச ஒழிப்புதுறையால் கைது.

* மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் இடம்பெற்றிருப்பதில் தவறில்லை. மெர்சல் பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் தரப்படுகிறது – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம்.

* புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு -புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

* அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

* வட தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் – வானிலை ஆய்வு மையம்