full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/11/17 !

* காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை : ஹந்த்வாரா முழுவதும் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை.

* நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் 50 பேர் உயிரிழப்பு.

* உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பெண் கைது.

* ஆர்கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான இடங்களில் ரூ.7 கோடி , ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் – வருமான வரித்துறை.

* முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு.

* இலங்கை கடற்படை கைது செய்த 37 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு. 37 பேரையும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

* திருவாரூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் : கிராம மக்கள் எதிர்ப்பு.

* போயஸ் கார்டனில் உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன 70 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன – வருமான வரித்துறை.

* மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் உறுதி.

* டெல்லியில் 108 அடி உயர அனுமன் சிலையை இடமாற்றம் செய்யலாமே என டெல்லி உயர்நீதிமன்றம் யோசனை.

* ஆர்கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை.

* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சிறப்பு அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

* தமிழகத்தில் மணல் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்பி.க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

* சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் தற்போதைய சூழலில் கண்டறிவது சிரமம் பினாமிகள் யார் என்பதை உறுதிப்படுத்த விரிவான விசாரணை நடக்கிறது : வருமான வரித்துறை.

* தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி அரசு ஆட்சி செய்கிறது.அரசியல் சாசனப்படி சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தயாரா ? அரசு திட்டங்களை அறிவிக்காமல் திமுகவை விமர்சிக்கிறார்கள் : முக.ஸ்டாலின்.

* பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பன்சாலியை உத்தபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் விமர்சனம் செய்து உள்ளார்.

* தமிழகத்தில் டிச. 5ம் தேதி வரையே ஆட்சி இருக்கும்.மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நவ.28 முதல் வேலூர், சேலம், திருச்சி மண்டலங்களில் டிடிவி.தினகரன் சுற்றுப்பயணம் : நாஞ்சில் சம்பத்.

* கர்நாடகாவில் உள்ள மந்திராலயா ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார்.

* பத்மாவதி படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன் என்பது குறித்து தணிக்கைக்குழு உறுப்பினர் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா விளக்கம் அளித்து உள்ளார்.

* ஆந்திரா : செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் கைது.

* மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறேன் என கூறுபவர்கள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள் – தமிழிசை சவுந்தரராஜன் .

* சுகாதார துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது – தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி.

* மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படும்.மீனவர்கள் விவகாரத்தை அரசியலுக்காகவும் வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துகிறார்கள் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி கேகே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பு – உச்சநீதிமன்றம்.

* பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது வெளிச்சந்தையில் விலை உயர்வால் முட்டை வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சரோஜா மறுப்பு.

* டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்ககூடாது : தமிமுன் அன்சாரி எம்எல்ஏ.

* சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு.

* ஓபிஎஸ் , ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் மனங்கள் இணைந்ததா என அதிருப்தியை வெளிப்படுத்தும் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.

* 556 புதிய சிறப்பு மருத்துவர்கள், 175 இளநிலை உதவியாளர்கள், 49 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் வழங்கினார்.

* தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றுநீா் பாசன குளங்களுக்கு முறையாக தண்ணீா் திறக்கப்படாததால் திருச்செந்தூா் பிரதான சாலையில் உள்ள அனைத்து விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்.

* வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் சகோதரரை மணந்தால் மட்டுமே நிதியுதவி என்பதில் மாற்றம் செய்தது மத்திய அரசு . வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் மனைவி வேறு ஒருவரை மணந்து கொண்டாலும் நிதியுதவி பெறலாம்.

* மோடி குறித்து விரல் நீட்டி பேசினால் அவை துண்டிக்கப்படும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் நித்யானந்த் ராய் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

* நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி.