full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 21/12/17 !

* 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை.

* ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மையா? விளக்கமளிப்பதாக இருந்தால் அறிக்கை வெளியிடுவோம் : அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்.

* ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் ஆஜர்.

* எழிலகத்தில் உள்ள கலசமகாலில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடக்க உள்ளது.

* ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக இன்று மாலை பதிலளிக்கிறேன் : டிடிவி.தினகரன்.

* தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

* ஆர்கே.நகரில் வாக்காளருக்கு பணம் தர ரூ. 20ஐ டோக்கனாக தந்த 15 பேர் கைது.

* டெல்லி : 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை.

* சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஜனவரி 2 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு.

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.