* தமிழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட 5 இடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வரும் – தமிழக முதல்வர்.
* காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.
* 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் : சென்னை காவல்துறை.
* முக்கிய சுற்றுலாதலங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவுநேர உணவகங்கள் திறக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டம்.
* மத அமைதியை குலைக்க யார் முயன்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு.
* நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் : முக.ஸ்டாலின்.
* தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.
* கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மீதான குற்றச்சாட்டு உண்மை – ஃபேஸ்புக் நிறுவனர் அளித்த பகீர் ஒப்புதல் வாக்குமூலம்.
* அறைக்குள்ளே அரசியல் நடத்தும் ஆன்மிக அரசியல் ஞானிதான் ரஜினி – அமைச்சர் ஜெயக்குமார்.
* தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்.பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் அரசிதழில் வெளியிடப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.
* தமிழகத்தில் தனியார் மருத்துவ சேவையின் தரத்தை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.போலி மருத்துவர்களை கண்டறிய மருத்துவமனைகளை முறைபடுத்தும் சட்ட விதிமுறைகள் உதவும் – அமைச்சர் விஜயபாஸ்கர்.
* சிகிச்சையின் போது ஜெயலலிதா தங்கியிருந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக சிசிடிவி செயல்படவில்லை : அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி.
* ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட விஎச்பியின் ரத யாத்திரை நெல்லை சென்றடைந்தது.கே.டி.சி. நகர், நான்கு வழிச்சாலை வழியாக கன்னியாகுமரி செல்கிறது ரத யாத்திரை.
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் – சட்டப்பேரவையில் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்.
* தனி மனித அடையாளத்திற்காக ஆதாரை மட்டும் நம்பாமல், மாற்று ஏற்பாடுகளை செயல்படுத்த அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவுரை – உச்சநீதிமன்றத்தில் ஆதார் சிஇஓ அஜய் பூஷன் பாண்டே தகவல்.
* புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரின் நியமனம் செல்லும் – உயர்நீதிமன்றம்.
* புதுச்சேரி எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்பதை ஏற்க முடியாது : திருமாவளவன்.
* உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு; ஆனால் உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறைப் பணிகள் இன்னும் முடியவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்.
* இன்சுலினோமோ எனப்படும் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
* சென்னையில் தனது கட்சிப் பணி குறித்து ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
* “நீரின்றி அமையாது உலகு”, என நீரின் இன்றியமையாத தன்மையை உலகத்திற்கு சொன்ன தமிழகத்திற்கு, காவிரி நதிநீர் பங்கீட்டில் நாம் பெறவேண்டிய நீரை பெறுவதற்கு பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் : டிடிவி தினகரன்.
* 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்வோம் – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.
* வன்முறையை தூண்டும் வகையில் பேசும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல சோதனைக்கு அனுப்பக் கோரிய புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு : மார்ச் 28க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தக்கலை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஏப்.2-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே.
* அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு.
* ஈராக் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக ஆதாரம் வெளியீடு.
* நியமன எம்.எல்.ஏ வழக்கு தீர்ப்பு தொடர்பாக, அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு நடவடிக்கை – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
* திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள்மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தம்புராஜ் தற்காலிக நீக்கம் : திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பை அரவிந்த் கூடுதலாக கவனிப்பார் நிர்வாகி சுதாகர் அறிவிப்பு.
* அங்கன்வாடி ஊழியர் சுமதி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வாபஸ் : சுமதி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் – நெல்லை ஆட்சியர்.
* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.