* தமிழகத்தில் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளது : 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் இ புக் பயிற்சி அளிக்கும்.
* முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் வேலுமணி.
* டிஎன்ஏ பரிசோதனை கேட்டு அம்ருதா தொடர்ந்த வழக்கு : ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் – சென்னை உயர் நீதிமன்றம்.
* 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும், சிக்கல் இல்லாமல் 12-ம் வகுப்பை தொடரலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்.
* ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயர்நீதிமன்றங்களுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கலாம். சிறப்பு வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பதில் தவறு இல்லை – உச்சநீதிமன்றம்
* விரைவில் லோக்பால் தலைவர் நியமிக்கப்படுவார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் : லோக்பால் தலைவரை நியமிக்க மார்ச் 1ல் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆலோசனை.
* ரசிகர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும். எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள் – நடிகர் ரஜினி.
* ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த அய்யப்பன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர் : ஓட்டுனர் ஐயப்பன் மார்ச் 8ம் தேதி மீண்டும் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு.
* டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் போலீசார் சோதனை; டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக சோதனை.
* புதுக்கோட்டையில் 3 மாவோயிஸ்ட்கள் தங்கியிருந்த வீடுகளில் 3 மடிக்கணினிகள், 5 பென் டிரைவ்கள் பறிமுதல் : விசாரணை அதிகாரி புகழேந்தி.
* கட்சி கட்டமைப்பு தான் முதலில் முக்கியம்; மிகப்பெரிய கட்சிகள் இதனால் தான் வெற்றிபெற்றன – ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி அறிவுறுத்தல்.
* ஏற்கனவே அறிவித்ததுபோல் இன்னும் 2 நாட்களில் ஏர்செல் செல்போன் சேவை முழுமையாக சீரடையும் : ஏர்செல் தென்னிந்திய செயல் அதிகாரி சங்கரநாராயணன்.
* நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஸ்லீப்பர்செல் அல்ல – டிடிவி தினகரன்.
* டிடிவி.தினகரன் தரப்பில் தான் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் நாங்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கிறோம் – அமைச்சர் ஜெயக்குமார்.
* கேரளாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி ஆதிவாசி இளைஞரை 15 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொன்றது.
* 2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்.
* ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதால் ஓபிஎஸ் முதல்வர் பதவி கேட்கிறார். முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என பன்னீர்செல்வம் விரக்தியில் பேசுகிறார்.எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் – டிடிவி.தினகரன்.
* முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் – டிடிவி.தினகரன்.
* ரூ.6.6 கோடி மதிப்பில் இந்திய மருத்துவக் கல்லூரி கட்டடம் மற்றும் ரூ.5.2 கோடி மதிப்பிலான விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
* இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் விவகாரம் : தென்மாவட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் டிரான்ஸ்ஃபர்.
* தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்.அதிமுகவை வழிநடத்தவும், தலைமை தாங்கவும் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கே திறமை உள்ளது – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு.
* கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு டிடிவி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் ஓபிஎஸ் & ஈபிஎஸ் அணியினர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு.
* காவிரி பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது ஒரு பயனும் அளிக்காது தமிழக கட்சிகள் அமைதியாக இருந்தாலே காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தும் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
* ஜெயா டிவி சிஇஓ விவேக் உள்ளிட்ட 3 பேருக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் : பிப்.27ல் ஜெயலலிதா வாகன ஓட்டுநர் கண்ணன், பிப்.28ல் விவேக் ஜெயராமன், மார்ச் 2ம் தேதி சமையல்காரர் சேகர் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு.
* 2018 -2019ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் பொறியியல் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* திருநங்கை என்பதால் பணி அமர்த்த ஏர் இந்தியா காலம் தாழ்த்துவதாக கூறி ஷானவி தாக்கல் செய்த மனு மீது ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
* கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது.கமல் சிறப்பாக செயல்படுவார் – நடிகர் ரஜினிகாந்த்.
* தமிழகத்தில் ஜெயின் சமூகம் தொழில் தொடங்க முதல்வர் பழனிசாமி அழைப்பு.
* திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனைகள், தனியார் ஸ்கேன் செண்டர்களில் சுகாதாரத்துறையினர் மீண்டும் சோதனை.
* திருப்பதி செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு : கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
* குமரி: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
* அகில இந்திய கட்சித் தலைவர்கள் வேடிக்கை பார்ப்பதால் தான் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது.காவிரி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகளுக்கு அதிருப்தி : பழ.நெடுமாறன்.
* டெல்லி தலைமை செயலரை தாக்கியதாக கைதான ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுக்கு ஜாமின் மறுப்பு.
* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு பிரதமர் மோடி வரவேற்றார் : இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
* வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது.இந்திய மகளிர் அணி சிறுத்தையை போல் திறமையாக விளையாடுகின்றனர் – சவுரவ் கங்குலி.
* இடத்தகராறு காரணமாக திருவாரூரில் தாய், தந்தை, மகளுக்கு அரிவாள் வெட்டு : 3 பேரை வெட்டியதாக முருகானந்தம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை.
* விருதுநகர் : சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு.
* கீழ் ஆழியாறு அணையில் இருந்து நீர் தரக்கோரி தமிழக வாகனங்கள் மீது கேரளாவில் தாக்குதல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் தமிழக லாரிகள் நிறுத்தம்.
* சென்னை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார்.
* ஒகேனக்கலில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் 4 அரசுப் பேருந்துகள் ஜப்தி.
* தமிழகத்தில் இறக்குமதி மணலை விற்பனை செய்ய அனுமதித்தால் சட்டவிரோத மணல்குவாரிகள் பெருகும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
* தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நிறைவு அளிக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்.
* கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : அந்தோணியார் கோயிலில் இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும் திருப்பலியும் நடைபெற உள்ளது.
* சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார்.
* மார்ச் 2 முதல் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு.