full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/05/18 !

* தூத்துக்குடியில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவம் தமிழகம் வருகிறது.

* தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை.

* தூத்துக்குடி நகருக்குள் வெளியாட்கள் நுழையத் தடை – காவல்துறை உத்தரவு.

* தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் : மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா.

* தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு நடக்கிறது.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு.

* காஷ்மீர் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் – பொதுமக்களில் ஒருவர் உயிரிழப்பு.

* பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் தூத்துக்குடியில் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை.

* ஸ்டைர்லைட் ஆலை போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட அனைத்து நிர்வாகத்தின் தோல்வி காவல்துறையின் மிருகத்தனமான, சட்டத்திற்கு புறம்பான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் : ரஜினிகாந்த்.

* தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து சென்னை விரைகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் : உதகையில் நிகழ்ச்சிகளை ரத்து செய்து சென்னை திரும்புகிறார் ஆளுநர்.

* துப்பாக்கி சூடு : முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் – நடிகர் பிரகாஷ் ராஜ்.

* ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை 4மாதத்திற்குள் நடத்த வேண்டும் : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

* தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தில், 25ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு. பொதுக்கூட்டம் நடத்த, மிதிவண்டி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடை : தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

* தூத்துக்குடியில் போராட்டத்தின்போது நடந்த சம்பவம் வருந்தத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலைக்கும், ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் – ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம்.

* தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

* தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு : வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அறிவிப்பு.

* தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு.

* தூத்துக்குடியில் அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வதந்திகளை தூத்துக்குடி மக்கள் நம்ப வேண்டாம் – டிஜிபி டிகே. ராஜேந்திரன்.

* 5 நிபந்தனைகளும் ஏற்புடையது அல்ல, இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளோம். சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று சட்ட, ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினர் – ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசு, டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.

* காங்கிரஸ் – மஜத கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை பாஜக தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – குமாரசாமி.

* தூத்துக்குடி போராட்டத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்சிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் கார்த்திக் உயிரிழப்பு.

* ஸ்டெர்லைட் விவகாரம்: மக்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசு தீர்வு காணவேண்டும் : நடிகர் சூர்யா.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிமுகவின் தொண்டனாக நான் தலை குணிகிறேன்.
துப்பாக்கி சூடு என்பது ஒரு ஆட்சியை கலைக்க கூடிய நிலைக்கு செல்லும் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பு : நடிகர் ஆனந்தராஜ்.

* உயிர்கொல்லி நிபா வைரஸ் தாக்கியதில் கேரளாவில் 12 பேர் பலி : 94 பேரை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பு.

* ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம் : டிஜிபி அலுவலகம், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு – சென்னை முழுவதும் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு.

* நகராட்சி பகுதிகளில் 1100 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்.

* பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்.5456 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார் – அமைச்சர் செங்கோட்டையன்.

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 96.4%, மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 28ல் சிறப்புத்தேர்வு.

* லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்.

* துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* தூத்துக்குடி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11பேர் பலியான விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை.

* தூத்துக்குடி காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக.தமிழ்நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா ? : ப.சிதம்பரம்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் பயங்கரவாதம் – ராகுல் காந்தி கண்டனம்

* கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு மதுரை, நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் தூத்துக்குடி சென்றுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

* துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, டேவிதார் ஆகியோர் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர்.

* தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து, வரும் 25 ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்.அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் : திமுக அறிவிப்பு.

* இனி போராட்டம் நடத்த கூடாது என்று திட்டமிட்டு துப்பாக்கி சூடு தூத்துக்குடியில் நடத்தப்பட்டது அப்பட்டமான படுகொலை – அன்புமணி ராமதாஸ்.

* தூத்துக்குடி நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிப்பு.

* போலீஸ் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, கூத்தேன்குழி, உவரி, பெருமணல் உட்பட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க இன்று கடலுக்குச் செல்லவில்லை.

* 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் போராடியபோது, ஆதரவு தெரிவிக்க யாரும் இல்லை – பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்.

* சென்னை மெரினா கடற்கரை சாலையில் முதல்வரின் வாகனத்தை மறிக்க மீனவர்கள் முயற்சி மெரினா கடற்கரை சாலைக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு : போலீசாருடன் அயோத்தியாகுப்பம் மக்கள் தள்ளுமுள்ளு.

* ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பறிபோன உயிர்களுக்கு ஒரே மாற்று, ஆலையை மூடுவதுதான் – கமல்ஹாசன்.

* தூத்துக்குடியில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவ தேர்வுகள் ரத்து – பல்கலை. அறிவிப்பு.

* தூத்துக்குடி கலவரம் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆறுதல்.

* பிரதமர் மோடி அரசு நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ள நிலையில், மத்திய அரசின் சாதனைகள் குறித்த பிரச்சாரத்தை அமித் ஷா தொடக்கம்.

* காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அனுமதி கொடுத்ததால் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது – பொன்.ராதா கிருஷ்ணன்.

* ஜாலியன் வாலாபாக்கில் உயிர்களை வேட்டையாடியதை போல தமிழக காவல்துறையும் பலிவாங்கி உள்ளது.உயிர்களை பலி வாங்கிய காவல்துறையினர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் – வைகோ.

* தூப்பாக்கியால் சூடப்பட்டு காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போரட்டக்காரர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

* துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு.

* துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடியில் மார்க் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உண்ணாவிரதம்.

* பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

* திண்டுக்கல்: மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை.