full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/05/18 !

* தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் உள்ளனர் : தமிழக அரசு.

* தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளிலும் மாலை 6 மணிக்கு இடைக்கால தீர்ப்பு.

* தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : மீண்டும் திங்கட்கிழமை முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* கர்நாடக முதல்வர் குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் – எடியூரப்பா.

* தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 53 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில்

* தூத்துக்குடி அரசு மருத்துவமனை நோயாளிகள் சிகிச்சை குறித்து ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு – தமிழக அரசு.

* நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து – தமிழக அரசு உத்தரவு.

* சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

* தூத்துக்குடியில் அமலில் உள்ள இணையதள சேவைக்கான தடை 2 நாளில் விலக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்.

* ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது திமுக தான். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராட திமுக, காங்கிரசுக்கு உரிமை இல்லை – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

* தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கண்டித்து காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கைது.

* நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வெற்றி.

* இணைய சேவை முடக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* தூத்துக்குடி சம்பவத்தில் சண்முகம் என்பவரின் உடலை ஒப்படைக்கக் கோரி அவரது தந்தை பாலையா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு : பிரேத பரிசோதனை முறையாக நடந்துள்ளதா என விசாரிக்க உள்ளதால், சண்முகத்தின் உடலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

* திமுக நாடகம் நடத்துகிறது என்றால், அதிமுக கபட நாடகம் நடத்துகிறது. தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக மாறியுள்ளது : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* தஞ்சாவூர் அருகே 46 ஆண்டுகளுக்கு முன் காணாமல் நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.

* அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை – விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத் பேட்டி.

* தூத்துக்குடியில் இன்று காலை 8 மணி முதல் மே 27ம் தேதி காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – ஆட்சியர் சந்தீப் கந்தூரி.

* பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

* கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வு.

* ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும், அதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.

* ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும் சிறை செல்வதை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை – முக.ஸ்டாலின்.

* தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு.

* மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி.

* மே 29 முதல் ஜூன் 2ம் தேதி வரை ஐந்துநாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி.

* சென்னையில் மறியல் செய்ததாக திமுகவினர் உள்ளிட்ட 3001 பேர் கைது – சென்னை காவல்துறை.

* தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்புவதற்கு ஏற்ப, அந்த மாவட்டத்தில் முழு அடைப்பு இல்லை – திமுக எம்எல்ஏ கீதாஜீவன் அறிவிப்பு.

* தமிழகத்தில் முழு அடைப்பு காரணமாக கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தம்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தமிழக அரசைக் கண்டித்து ஒப்பாரி வைத்து திருநங்கைகள் போராட்டம்.

* தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் 3 அரசு பேருந்துகள் இயக்கம்.

* ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இயக்குனர் கவுதமன் சிறையில் உண்ணாவிரதம்.

* தூத்துக்குடியில் இன்று மாலை முதல் படிப்படியாக போலீசாரை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி .

* துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது.

* நிபா வைரஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை : கடிக்கப்பட்டு கீழே விழுந்திருக்கும் பழங்களை உண்ண வேண்டாம்.பழங்களை தண்ணீரில் கழுவிய பின் சாப்பிட வேண்டும்.

* சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் – முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

* திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடித்தது உதவி பாகனை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே கஜேந்திரன் உயிரிழந்தார்.

* சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை நாளை திறக்கப்படும் என நிர்வாகம் தகவல் : நாளை அதிகாலை கோயிலில் பரிகார பூஜை நடத்தப்படும் என ஊழியர்கள் தகவல்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.