full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/11/17 !

* நாகை வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் : 3 விசைப்படகுகளில் சென்ற செய்யூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

* ஆர் கே நகர் தேர்தல் முறைகேடுகளை தடுக்க குடியிருப்புப் பகுதியில் கண்காணிப்பு கேமரா : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி.

* ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி டிச.5ம் தேதி அமைதி ஊர்வலம் நடைபெறும் – அதிமுக தலைமை கழகம்.

* கோதாவரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

* ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – ராமநாதபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு.

* ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டி – திமுக அறிவிப்பு.

* 9,351 குரூப் 4 காலியிடங்களுக்கு பிப். 11-இல் எழுத்துத் தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

* சின்னம் வழங்கப்பட்டதிலும், தேர்தல் அறிவித்ததிலும் அரசியல் தலையீடு இல்லை. இடைத்தேர்தலில் அதிகாரிகள் மாற்றப்படுவது இயல்பே. அதில் அரசியல் ஏதுமில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்.

* ஆர் கே நகர் இடைத்தேர்தல் புகார்களுக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பிரத்யேக கட்டுப்பாட்டு அறை திறப்பு : உதவி துணை ஆணையர் ரவி தலைமையிலான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு.

* ஆர் கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை – வாகன சோதனையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரம்.

* பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவாக போராட்டம் – இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் அறிவிப்பு.

* வி கே சசிகலாவின் அனுமதியுடன் ஆர் கே நகர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – டிடிவி.தினகரன்.

* ஆர் கே நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு விசிக ஆதரவு. மு க ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டதை தொடர்ந்து விசிக முடிவு – திருமாவளவன்.

* கூவம் கரையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் வீடு முற்றுகை.

* மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பத்மாவதி படத்தையும், படக்குழுவையும் மேற்கு வங்காளத்தில் வரவேற்கிறோம் என கூறி உள்ளார்.

* பத்மாவதி படத்தைத் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் – மம்தா பானர்ஜி.

* ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டதற்கு மத்திய அரசின் தலையீடுதான் காரணம் – ஜெ.தீபா.

* வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் – ராமேஸ்வரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

* நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை : நடிகர் விஷால்.

* 4 மாணவிகள் தற்கொலை தொடர்பாக 2 ஆசிரியைகளிடம் வேலூரில் விசாரணை : செய்யூர் அருகே பனப்பாக்கம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையிடம் விசாரணை.

* அரக்கோணத்தை அடுத்த பணப்பாக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிதியுதவி பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

* இரட்டை இலை சின்னம் மீட்பு தொடர்பாக மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தலைவர்கள் உட்பட யாருக்கும் அழைப்பு இல்லை – ஓபிஎஸ் ஆதரவாளர் அஸ்பயர் சுவாமிநாதன்.

* சென்னை : கேள்வித்தாளை வெளியிட்டதாக சென்னையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரி பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

* தாங்கள் அளித்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் தங்களை உண்மையான அதிமுக என அங்கீகரித்துள்ளது – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* நேர்முக தேர்வில் பங்கேற்றதற்காக பணி நியமனம் வழங்க உரிமை கோர முடியாது : உயர்நீதிமன்றம்.

* விருதுநகர் : திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியில் தனியார் காகித ஆலையில் இயந்திரத்தில் சிக்கி ஊழியர் அரியமலை உயிரிழப்பு.

* தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் : பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு செல்லாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் 45 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 14 பேர் போலி மருத்துவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர் : ஆட்சியர் சுந்தரவல்லி.

* தஞ்சையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருச்சி – நாகை சாலையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல்.

* வேலூர் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி பனப்பாக்கத்தில் கடையடைப்பு.

* மதுரை : தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றினார்.

* தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மண்டல தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் – மதுரை மண்டல அதிகாரிகள் மணீஷ்வரராஜா, அருண்பிரசாத் கூட்டாக தெரிவித்தனர்.

* பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தடை.

* காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே 2 கார்கள் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீச்சு