full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/03/18 !

* தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை.

* பாஜக தலைமையிலான தேசிய ஜனபிக் நியூஸ் 🚨 26/03/18 !

* தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை.

* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை செயலரிடம் மனு.

* ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ரசாயன தாக்குதல் திட்டம் குறித்து மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை.

* உலகத் தமிழ் சங்கங்களின் மாநாடு மே மாதம் 25, 26, 27 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

* காவிரி வாரியம் அமைக்க 3 நாட்கள் அவகாசம் இருக்கும் வரை காத்திருந்து பார்ப்போம் – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

* கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை ஏப்.2ஆம் தேதி வரை தொடரும் – உச்சநீதிமன்றம்.

* சொடக்குப் போட்டா ஆட்சி இருக்காதா ?’ – முக.ஸ்டாலினுக்கு சவால்விட்ட தமிழக முதல்வர் பழனிசாமி.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது.புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது – தமிழக அரசு.

* விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு, நிலைக்க வாய்ப்பில்லை : நடிகர் கமல்ஹாசன்.

* ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு வரும் 31 ஆம் தேதி வரை சிபிஐ காவல் – டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

* மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்திற்கு பலன் கிடைக்கும் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

* கடப்பாரை போட்டு நெம்பினால் கூட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது : தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி.

* ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து கூற முடியாது.காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ.

* தமிழக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திமுக ஒரு நாளும் போராடியதில்லை – அமைச்சர் ஜெயக்குமார்.

* பழனி முருகன் கோவில் நவ பாஷாண சிலையை கடத்தி வெளிநாட்டில் விற்க முயற்சி : நீண்ட கால சதி திட்டத்தை தகர்த்து, ஸ்தபதி முத்தையாவை கைது செய்தது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு.

* நேர்மறை அரசியல் செய்யும் பா.ஜ.க. தமிழகத்தில் நிச்சயம் காலூன்றும் – பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

* தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்.

* எந்த கொடியையும் ஏந்த மாட்டேன் எந்த தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன் கர்நாடக தேர்தல் முடியும் வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது – நாஞ்சில் சம்பத்.

* ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் : நடிகர் விவேக்.

* ஓராண்டு காலத்தில் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனைகளை முதலமைச்சர் செய்துள்ளார்.சாதாரண குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முதலமைச்சராகியுள்ளார் பழனிசாமி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

* மேற்கு வங்காளத்தில் ராமநவமி ஊர்வலத்தின் போது இரு குழுவினர் இடையே மோதல் ஒருவர் பலி.

* கரூரில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது முதலமைச்சர் டிடிவி.தினகரன் அணியினர் இடையே மோதல் : டிஎஸ்பி வாகன கண்ணாடி உடைப்பு தொடர்பாக தினகரன் அணியை சேர்ந்த 8 பேர் கைது.

* கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில், பூச்சிகளுக்கான அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

* நெல்லை – நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி தொடக்கப்பள்ளி மாணவிகளை, வகுப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவதாக புகார்.

* தமிழகத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது : எம்பி கனிமொழி.

* சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை : வங்கி கொள்ளை தொடர்பாக விசாரிக்க தியாகராயநகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு.

* அரசின் அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

* நாகை எரவாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.54 லட்சம் முறைகேடு : ஏரவாஞ்சேரி நியாய விலை கடை ஊழியர் தெய்வபிரபா கைது.

* திருச்சி கே.கே. நகர் தென்றல் நகரில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் ஒத்திவைப்பு.

* ஆண்டு இறுதிக்கணக்கை முடிப்பதற்காக தமிழகத்தில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு வங்கிகளுக்கு ஏப்.2ம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.

* பாலக்கோடு அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதால் 2 பேர் உயிரிழப்பு.

* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி அபார வெற்றி.

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா செய்ததை அடுத்து கேப்டனாக ரஹானே தேர்வு.நாயக கூட்டணிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை செயலரிடம் மனு.