full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 26/12/17 !

* புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் – டிடிவி.தினகரன்.

* அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு டிடிவி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து.

* விவசாய டிராக்டரை வணிக வாகனமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் : மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள்.

* 11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு. ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை பாட திட்டத்தில் இடம் பெறும் – அமைச்சர் செங்கோட்டையன்.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, விசாரணைக்குழுவை அமைத்தது திமுக.

* ராமநாதபுரம் உப்பூரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனல்மின் நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு : ஜனவரி 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளன. எனது பிறந்த நாளின் போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் – நடிகர் ரஜினிகாந்த்.

* அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும். அரசியலின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன். போருக்கு சென்றால் ஜெயிக்கணும் – நடிகர் ரஜினிகாந்த்

* குஜராத் மாநில பாஜக முதலமைச்சராக விஜய் ரூபானி பதவியேற்பு : விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை.

* ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் அரசியல் என்ன மணல் வீடு கட்டி மகிழும் விளையாட்டா? டிடிவி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கருத்து.

* சுயேச்சை என கேலி செய்தவர்களுக்கு முன் டிடிவி.தினகரன் சுயம்பு என நிரூபித்திருக்கிறார் – நாஞ்சில் சம்பத்.

* ஆர்கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி என்பது கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி – அமைச்சர் ஜெயக்குமார்.

* ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் தலைமை, தினகரன் தான் என்பதை ஆர்கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது – புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் பேட்டி.

* ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது. தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே காலம் தாழ்த்தி வந்தார் – நடிகர் ஜீவா.

* ரஜினி எம்எல்ஏ ஆகலாம், முதல்வர் ஆகக்கூடாது : நடிகர் எஸ்வி.சேகர்.

* டிடிவி.தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு – அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்.

* ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது, ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க யார் வந்தாலும் வரவேற்போம் – தமிழிசை சௌந்தரராஜன்.

* ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன், அவர் வரட்டும். ரஜினி பாஜகவுக்கு பின்நின்று வருவார் என ஒரு யூகம் உள்ளது, அவ்வாறு இருந்தால் அது வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் – திருமாவளவன்.

* ரஜினி அரசியலுக்கு வருவது, அவர் உடல்நலத்திற்கும், குடும்பத்திற்கும் நல்லதல்ல – அமைச்சர் ஓஎஸ்.மணியன்.

* தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சர் தரப்புக்கு கிடையாது. விரைவில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தினகரனுடன் வந்து சேருவர் – நடிகர் செந்தில்.

* திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைப்பு. அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே பரபரப்பால் போலீஸ் குவிப்பு.

* ஆருத்ரா தரிசனத்திற்காக ஜன-2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

* சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது.

* பெய்ஜிங் : ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.