full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 !

* காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.

* காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து மே 3-ம் தேதி நல்ல செய்தி வரும் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

* சத்தீஷ்கர் : பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.

* ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது – உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

* திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 10 வயது சிறுமி உட்பட 4 பெண்கள் மாயம் கடந்த 3 நாட்களில் மட்டும் 12 பெண்களை காணவில்லை என புகார்.

* கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் : முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி அறிவிப்பு.

* உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்றார், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் சிறிதளவு நேர்மை மாறினாலும், வழக்கு வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை.

* திமுக ஆட்சி வந்தவுடன் லோக் ஆயுக்தா. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னையில் கைதான திமுகவினரை சந்தித்த பிறகு முக.ஸ்டாலின்.

* கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் – அமைச்சர் ஓஎஸ். மணியன்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கல்லணையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் விவசாயிகள் பேரணி.

* குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டும்; தேர்தல் வரும்போது மக்கள் உரிய முடிவை எடுப்பார்கள் – முக.ஸ்டாலின்.

* தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு மே 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

* டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்குமாறு பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு.

* காவிரி வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மெரினாவில் வரும் 29-ம் தேதி போராட்டம் – தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்.

* குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை என்பது திமுகவின் வெற்றி அல்ல சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக்கோரிய திமுகவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை : அமைச்சர் ஜெயகுமார்.

* பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில், விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை.

* பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு சொந்தமான 7,105 சதுர அடி நிலம் வருமான வரித்துறையால் முடக்கம்.

* கால்நடை துறை இயக்குனர் பத்பநாபன் மீது பாலியல் புகார் கொடுத்த கால்நடை மருத்துவர் ராணியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு.

* 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி வளாகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

* வைகை அணையில் இருந்து இன்று முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.

* கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.

* கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 95% நிறைவேற்றப்பட்டது. தற்போது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : ராகுல் காந்தி.

* காவிரிநீர் தர தமிழகத்துக்கு விருப்பமில்லாததால் தான் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு. கர்நாடகாவில் தேர்தல் முடிந்தாலும் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்காது – சீமான்.

* தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுத நடவடிக்கை எடுக்குமாறு சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியுள்ளோம் – அமைச்சர் செங்கோட்டையன்.

* காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது – வைகை செல்வன்.

* கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் – கர்நாடகத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி.

* சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிட்டல் பார்வையாளர் பதிவு முறை அறிமுகம்.

* 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தேர்வாணைய பிரிவு அதிகாரி காசி ராம்குமார் கைது.

* தென்னிந்திய ஊடகங்கள் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். தென்னிந்திய செய்தி சேனல்கள் துல்லியமான செய்தியை வழங்கி வருகின்றன – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : மதுரை ஒத்தக்கடையில் உதவி பேராசிரியர் முருகன் வீட்டில் சிபிசிஐடி சோதனை.

* மே 1 முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் பெற ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு.

* 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் 14 வருடங்களுக்கு பிறகு குட முழுக்கு நடைபெற்றது.

* வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்