full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 29/01/18 !

* பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மறியல் : மறியலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது.

* 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.

* திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் தற்போது கட்டணம் உயர்வு. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் திமுக தான் – தமிழக முதலமைச்சர்.

* சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களை ஒருபோதும் அகற்ற முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

* இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கு பிப்.14 க்கு ஒத்திவைப்பு : வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகரின் காவலை பிப்.14 வரை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்.

* புதிய இந்தியாவை உருவாக்குவதில் 2018 ஆம் ஆண்டு முக்கிய பங்கு வகிக்கும். சமூக நீதி, பொருளாதார சமநிலையை உருவாக்குவதில் எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது – இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

* பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை கொளத்தூரில் சாலையில் அமர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறியல்.

* பேருந்து கட்டணம் உயர்வை கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு குறைக்க வேண்டும் – டிடிவி தினகரன்.

* மின்சார வாரியத்தில் எந்த வித ஒப்பந்தமாக இருந்தாலும், அது நேரடியாக தான் நடைபெறுகிறது : மின்சார துறை அமைச்சர் தங்கமணி.

* சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிகள் மீறப்படவில்லை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

* பெட்ரோல் டீசலை , ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவிப்போம். அதிமுகவில் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* பாரத் மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : உடன்குடி மின் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

* தற்போது போக்குவரத்து கழகம் கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது. டீசல், பேருந்து உதிரிபாகங்கள் விலை திமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது – தமிழக முதலமைச்சர்.

* ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

* பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்து கழக நஷ்டத்தை சரிசெய்யலாம் : முக.ஸ்டாலின்.

* ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா ஏற்கனவே ஐயர் தான்; அவர் புதிதாக முயற்சிப்பதாகக் கூறுவது புரிதல் இன்மையே – இளையராஜா ஐயராக மாற நினைப்பதாக கூறிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஹெச். ராஜா பதில்.

* எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து விவசாயிகளின் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும் – அய்யாக்கண்ணு வலியுறுத்தல்.

* உயர்நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய நித்தி சீடர் நரேந்திரனை கைது செய்ய உத்தரவு.

* மதுரை ஆதினம் வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

* ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் என் பெயர் இல்லாதது பற்றி எனக்கு கவலை இல்லை – பன்னீர்செல்வம், துணை முதல்வர்.

* தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள 67 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் துவக்கப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன்.

* கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் போராட்டத்திற்கு மாணவர்களை யாரும் தூண்டிவிடவில்லை கைது செய்தவர்களை விடுதலை செய்து வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் – வைகோ.

* காரைக்கால் பெண் தாதா எழிலரசி தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் கைது : எதிரியை கொலை செய்ய நட்சத்திர ஓட்டலில் சதிதிட்டம் தீட்டிய போது சிக்கினர்.

* திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற கோரிக்கை.
கட்சிக்கு முரணாக செயல்பட்டதாக சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்.

* மன்னார்குடி மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்.

* சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராமை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு.

* தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.2 வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

* தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.