full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நடுத்த வர்கத்தினருக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்ததாக மக்கள் கருதுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன் முக்கிய அம்சங்கள்,

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு; டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 3073 கோடி ஒதுக்கீடு

* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது

* மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு

* கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்

* கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு

* 5 ஜி சேவை குறித்து ஐ.ஐ.டி சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

* உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த 5.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

* எம்.பி.க்களுக்கு படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்த்தப்படும். பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்

* குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

* துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாக உயர்வு

* ஆளுநரின் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்வு

* புதிதாக 81 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

* தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு .

* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக தொடரும்.

* வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் பிட் காயின்கள் கொண்டுவரப்படும்; பிட் காயின் பணமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கும் விருதும், பரிசும் வழங்கப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்பு திட்டம்;ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 40,000 ரூபாய் வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை

* மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50,000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு

* வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரமாக உயர்வு

* பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படும்

இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், பழ ஜூஸ் வகைகள், வாசனை திரவியங்கள், காலணிகள் விலை உயர உள்ளது. இருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை குறைய உள்ளது. முந்திரி பருப்புகள், சோலார் கிளாஸ், காதுகேட்கும் கருவிகள் போன்றவை விலை குறைய உள்ளன.

விலை உயர உள்ள இறக்குமதி பொருட்கள்

*கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்,
*மொபைல் போன்கள்
*சில்வர்
*தங்கம்
*காய்கறிகள், பழச்சாறுகள் (ஆரஞ்சு, ஜெர்ரீ உட்பட)
*சன்கிளாஸ்
*வாசனை திரவியங்கள், டாய்லட் வாட்டர்ஸ்
*சன்ஸ்கீரின்,
*நக பாலீஸ்
*டிரக் மற்றும் பேருந்து டயர்கள்
*சில்க் வாசனையூட்டிகள்
*காலணிகள்
*நவரத்தின கற்கள்
*வைரங்கள்
*கவரிங் நகைகள்
*ஸ்மார்ட் வாட்சஸ், அணியக்கூடிய கருவிகள்
*எல்.சி.டி,/ எல்.ஈ.டி, டிவி சட்டங்கள்
* பர்னிச்சர்
*விளக்குகள்
*கைக்கடிகாரம், பாக்கெட் கடிகாரம், கடிகாரங்கள்
*டிரைசைக்கிள்ஸ், ஸ்கூட்டர்ஸ், பெடல் கார்ஸ், சக்கரத்துடன் கூடிய பொம்மைகள்,
*வீடியோ கேம் கருவிகள்
*சிகரெட், சிகரெட் லைட்டர்கள், மெழுகுவர்த்திகள்
*படுக்கை மெத்தைகள்
*விளக்குகள்
*பட்டங்கள்
*வெளிப்புற விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள்
*சமையலுக்கு பயன்படுத்தப்பட கூடிய காய்கறி எண்ணெய்கள், ஆலீவ் மற்றும் கடலை எண்ணய்,
*பல் சிகிச்சை பொருட்கள்

விலை குறையக்கூடிய இறக்குமதி பொருட்கள்

* தோல் உரிக்கப்படாத முந்திரி பருப்புகள்
* சோலார் கிளாஸ்
* காது கேட்கும் கருவிகளுக்கான உற்பத்தி பொருட்கள்
* குறிப்பிட்ட சில மின்னணு மூலதன பொருட்கள்,