இயக்குநர் N.லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ‘தி வாரியர்’ எனும் ஆக்ஷன் என்டர்டெய்னர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க கலக்கலாக தயாராகி வருகிறார் உஸ்தாத் ராம் பொத்தினேனி. இப்படத்திலிருந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் முதல் சிங்கிள் பாடலான புல்லட் பாடல் வெளியாகி யூடியூப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் யூடியூப்பில் வெளியான புல்லட் பாடல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது, இப்பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சார்ட்பஸ்டர் பாடல் மொழி கடந்து ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கவர்ந்துள்ளது. இணையத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளியாகும் ரீல்கள் பாடலின் வெற்றியை நிரூபிக்கின்றன. இப்பாடலில் ராம் பொத்தினேனியின் அழகான மெட்டுகளை நடனத்தை ரீல்கள் வழியே மீண்டும் உருவாக்க அனைவரும் முயற்சிக்கின்றனர்.
இப்பாடலில் சிம்புவின் குரல், டிஎஸ்பியின் மாஸ் பீட்ஸ், ராம் பொதினேனியின் அட்டகாசமான அசைவுகள் என அனைத்தும் இணைந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அனைவரும் இந்தப் பாடலைப் பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர், மேலும் இப்பாடல் சமீபத்தில் மோஜ் ஆப்பில் 6 பில்லியனைத் தாண்டியுள்ளது.
டிஎஸ்பி மற்றும் எஸ்டிஆர் இருவரும் முறையே தங்கள் தனித்திறமையில் பாடலை மிக அற்புதமான வகையில் உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில் ராம் பொத்தினேனி தனது நடன அசைவுகளால் பாடலை வெகு உற்சாகமான ஒன்றாக மாற்றியுள்ளார். பாடலில் அவருடன் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார். பாடல் வீடியோவில் கூட பாடலின் பிரமாண்ட மேக்கிங் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
ராம் பொத்தினேனி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்தில் நமக்காக என்ன வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள் மட்டுமே. இரண்டாவது சிங்கிளான தாடா தாடா, ஒரு இனிமையான மெல்லிசை பாடலாக, அனைவரையும் மயக்குகிறது. இப்பாடலின் புகழ் எந்த நேரத்திலும் குறையாது என்று தோன்றுகிறது. இந்த பாடலுக்கு இந்தியா முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படம் ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது, இது கோலிவுட்டில் ராமின் அறிமுக திரைப்படமாகும். கமர்ஷியல் கிங் N லிங்குசாமி இந்த இருமொழி ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தை இயக்கியுள்ளார். படம் பெரிய திரைக்கு வரும்போது திரையரங்குகளில் ஒரு அதிரடி திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Srinivasaa Silver Screen சார்பில் ஶ்ரீனிவாசா சிட்தூரி, தயாரிக்க பவன்குமார் வழங்குகிறார். இந்த படத்தில் ஆதி பினுஷெட்டி பயங்கரமான வில்லனாக நடிக்கிறார். அக்ஷரா கவுடா இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.