கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகளை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் புதிதில்லை. அப்படி நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் மிக நீளமானது. தற்போது அந்த பட்டியலில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர், “யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்” பூம்ரா-வும் இணைந்திருக்கிறார்.
அவர், தெலுங்கில் பிரபலாமாக விளங்கக் கூடிய நடிகை ராஷி கண்ணா-வை காதலிப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இருவரும் ரகசியாமாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி ஒன்றாக வெளியூருக்குச் செல்வதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்தத் தகவலை ராஷி கண்ணா மறுத்தாலும், நிச்சயமாக அவர், பூம்ரா-வை காதலிக்கிறார் என தெலுங்கு திரையுலகினர் அடித்துச் சொல்கிறார்கள்.
ராஷி கண்ணா தமிழில் தற்போது நயன்தாராவுடன் “இமைக்கா நொடிகள்” படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக “அடங்க மறு” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.