full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்!

5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்!

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவி வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டிட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி, கள் நகர், வேங்கிக்கால், மற்றும் திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம், இராஜபாளையம், ஆடையூர் செங்கம் அருகிலுள்ள குளியம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை ஆர் எஸ் எஸ் எஸ் இந்நிறுவனத்தின் திரைப்படதயாரிப்பாளரும் தொழிலதிபருமான எஸ் தணிகைவேல் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் வழங்க முன்வந்துள்ளார்.

வீடு வீடாக இந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று 1500 குடும்பங்களுக்கு இந்த இலவச ரேஷன் பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளில் தொழிலதிபர் எஸ் தணிகைவேல் சார்பில் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.