சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் – நடிகை நமீதா பேட்டி

Press Meet

சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் – நடிகை நமீதா பேட்டி

பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது:-

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். பிற கட்சிகளை விமர்சிப்பதைவிட, பா.ஜனதா மக்களுக்கு என்னென்ன செய்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்து கூறுவேன்.

கொரோனா காலக்கட்டத்தில், மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி கூறியதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.