full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தனுஷுக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல தளங்களில், தனது முத்திரையைப் பதித்து வருபவர் தனுஷ். அவரைத் தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தாக்கல் செய்திருந்தனர். எந்த அடிப்படை ஆதாரமுமற்ற இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தாக்கல் செய்திருந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் என் மகன் தான். தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என கதிரேசன் – மீனாட்சி தம்பதி அறிவித்துள்ளனர்.