நடிகர் கமல்ஹாசன் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர் மீது வழக்கிற்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்த கமலின் கருத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் அவர் மேல் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
கடந்த மாதம் கூட, “இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனியும் சொல்ல முடியாது” என்ற கமலின் கருத்திற்கு உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சில இந்து அமைப்புகள் கமலை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று மிரட்டலும் விடுத்தது.
பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் கமலுக்கு எதிராக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக கமல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அந்த மனு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதி விசாரனை செய்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.