full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

சிம்பு, அனிருத்தைத் தொடர்ந்து கமல் மீது வழக்கு

ஆர்.கே.நகருக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன.

அமெரிக்காவில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருப்பதால் கமல் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கமல் கருத்து தெரிவித்தார். அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை விமர்சனம் செய்தது குறித்து கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராஜ் குமார் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.

இளங்கோவன் ஏற்கனவே சிம்பு, அனிருத் மீது வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.