நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Movies News Uncategorized

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், காதல் மற்றும் காமெடி படமான டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் போன்ற முக்கிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இப்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், இயக்குனர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.