பதைபதைக்க வைக்கும் தேனி காட்டுத்தீ!

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் சிக்கி பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  […]

Continue Reading

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியிட்ட போர்ப்ஸ்

போர்ப்ஸ் பத்திரிகை 2018-ஆம் ஆண்டின் உலகின் கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் உலகின் முதல் செல்வந்தராக உள்ளார். இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை கூறி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 72.84 சதவீதம் உயர்ந்து 40.1 பில்லியன் அமெரிக்க டாலராக (2,60,622 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. 11-வது ஆண்டிற்கான மிகப்பெரிய இந்திய பணக்காரராக உள்ளார். உலக அளவில் 2017-ஆம் ஆண்டில் 33-வது இடத்தில் […]

Continue Reading

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : கமல்ஹாசன்

ஆழ்வார் பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர் சந்திப்பு:   பெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கூற்று கீழ்த்தரமானது. அதனை சட்ட ரீதியான தண்டிக்க முடிந்தால் தண்டிக்க வேண்டும். பெரியாரை ஒன்றும் செய்திட முடியாது அவரது உயரம் அவ்வளவு அதிகம். பெரியார் சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை. அவரைப் பற்றி பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு தேவைப்படலாம். இது காவிரி மேலாண்மை அமைப்பதை திசை திருப்பும் செயல். நாம் திரும்பிடாமல் பாதுக்காக்க வேண்டும். நமக்க கலகங்கள் […]

Continue Reading

தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக்கூட்டம்

காவிரி நதிநீர் வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்தது. காவிரி நதி யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் […]

Continue Reading

நீட் தேர்விற்கான வயது உச்சவரம்பிற்குத் தடை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு […]

Continue Reading

ஸ்ரீதேவி பற்றி பேசுங்கள்.. அதே நேரம் ஆராயியையும் கவனியுங்கள்.. பிரசன்னாவின் வேண்டுகோள்!

விழுப்புரத்தில் ஆராயி என்பவர் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது எட்டு வயது மகன் அடித்துக் கொல்லப்பட்டான். மேலும், அவருடைய 14 வயது மகள் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து எந்த விதமான செய்தியும் வெளிவந்து விடாத வண்ணம் கவனமாக தவிரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்காக நடிகர் பிரசன்னா தனது குரலை பதிவு செய்திருக்கிறார். இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து உள்ள அவர், “இந்த சம்பவம் […]

Continue Reading

காஞ்சி மடாதிபதி மரணமடைந்தார்!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு இன்று காலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் […]

Continue Reading

ஸ்ரீதேவி உடல் இன்று மும்பை வருமா?

துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவரது உடல் நேற்று பதப்படுத்தப்படவில்லை. இதனால், மும்பைக்கு உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று இரவுக்குள் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/02/18 !

* தமிழகத்தில் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி அளிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளது : 2 லட்சம் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் இ புக் பயிற்சி அளிக்கும். * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 70 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் வேலுமணி. * டிஎன்ஏ பரிசோதனை கேட்டு அம்ருதா தொடர்ந்த வழக்கு : ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் […]

Continue Reading