இன்றைய முக்கியச் செய்திகள் 19.12.2017!

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் முரளிதரன் ஆஜர். * கொலையாளி நாதுராமின் நண்பர் தினேஷ் செளத்ரியை காவலில் எடுத்து சென்னை அழைத்துவர, தமிழக போலீசார் 2 நாட்களில் ராஜஸ்தான் பயணம். * 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்தாலும், தமிழகத்தில் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தப்பின் வைகோ பேட்டி. * ஒகி புயலால் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 !

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு. * எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர். * திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம். * குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் […]

Continue Reading

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8.15 மணி நிலவரப்படி பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. […]

Continue Reading

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி!

ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம் பெண் நீதிபதி அலுமேலு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம். கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு, பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் பயின்றார். 1991 ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அலமேலு, மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, […]

Continue Reading

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2-வது மற்றும் இறுதிக் கட்டமாக நாளை 93 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 69 பேர் பெண்கள். பா.ஜனதா சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் […]

Continue Reading

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் : கெளசல்யா

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கெளசல்யாவின் தாய் […]

Continue Reading

முக்கியச் செய்திகள்!

* சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் 3 பேரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கொருக்குப்பேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். *ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன் என்று நாளிதழில் வெளியான செய்தி தவறு – நடிகர் கவுண்டமணி. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் கவுண்டமணி. *நாகை: புயலில் காணாமல் போன நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேரை கண்டுபிடிக்காததைக் கண்டித்து […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 09/12/17 !

* நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி. * மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு. * ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். * சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி […]

Continue Reading

முதற்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய குஜராத் தேர்தல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பெண்கள் மற்றும் இளைஞர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து […]

Continue Reading

முக்கியச் செய்திகள்!

  * ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து முறையிட உள்ளதாக தகவல். *நாகை: படகு பழுதால் காமேஸ்வரம் அருகே இலங்கை மீனவர்கள் 3 பேர் கரை ஒதுங்கியுள்ளனர் – கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை. *காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையோடு, தூத்தூர் பகுதி மீனவர்களையும் அழைத்து செல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு. மத்திய […]

Continue Reading