இன்றைய பரபரப்பு செய்திகள் 08/12/17 !

* புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி தேங்காய்பட்டினம் சந்திப்பில் மீனவர்கள் மீண்டும் போராட்டம் : இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். * கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிப்பு. 14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது – தமிழக அரசு. * கன்னியாகுமரி : காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குளச்சலில் நடந்து வந்த […]

Continue Reading

பனாரஸ் பல்கலை தேர்வில் சாணக்கியரின் ஜி எஸ் டி

உத்தரப்பிரதேசம் மாநிலம் பணாரஸ் நகரில் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு எம்.ஏ படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பண்டைய மற்றும் மத்திய இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் பார்வை’ என்ற பாடத்திற்கான தேர்வில், ‘சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் ஜி.எஸ்.டி குறித்து கட்டுரை எழுதுக’ என்று ஒரு கேள்வி இருந்துள்ளது. இதேபோல, ‘உலகமயமாக்கல் குறித்து முதலில் சிந்தித்த இந்தியர் மனு – விவாதிக்க’ என்று மற்றொரு கேள்வி இருந்துள்ளது. சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் […]

Continue Reading

ஆர் கே நகர் வேட்பாளர் இறுதிப் பட்டியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் உள்ளிட்ட 145 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார். மேலும் நடிகர் விஷால், […]

Continue Reading

வெற்றிகளில் வென்ற விராட் கோலி

ஒரே ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவரது தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டில் 31 வெற்றிகளை பெற்றது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 30 வெற்றிகளை பெற்று இருந்தது. விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. இதனால் அவரது வெற்றி எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் உயராது. ஜெயசூர்யா 2001-ம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/12/17 !

* ஓகி புயலால் கன்னியாகுமரியில் 3,696 ஹெக்டர் பரப்பளவில் பயிர் பாதிப்பு : முதற்கட்ட ஆய்வில் வேளாண்த் துறை செயலர் தகவல். * வழக்கறிஞர் தொழில் தர்மத்தைக் காக்க மத்திய அரசு தலையிடும் நேரம் வந்துவிட்டது : உச்சநீதிமன்றம். * இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அன்னாரது நினைவை போற்றுவோம் – டிடிவி.தினகரன். * ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் நிலைமை தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் […]

Continue Reading

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/12/17 !

* தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம். * ஒக்கி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீடு. * முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. * காணாமல் போன மீனவர்களை கணக்கெடுக்கும் பணியில் 4 […]

Continue Reading

தீவுகளையெல்லாம் சிங்கப்பூராக மாற்றும் திட்டத்துடன் மோடி

குஜராத் சட்டசபைக்கு வருகிற 9,14-ந் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்றும் இன்றும் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நேற்று நர்மதா நதிக் கரையில் அமோத் சர்க்கரை ஆலை அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசை […]

Continue Reading

மீண்டும் நியூட்ரினோ ஆய்வு

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பசுமையாக காணப்படும் இந்த பகுதியில் மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த மையம் நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்து பூமியில் ஏற்படக்கூடிய இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி கடந்த 2010-2011-ம் ஆண்டு இதற்காக ரூ.1520 கோடி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. […]

Continue Reading

தினகரன் அணி ஆர் கே நகர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு […]

Continue Reading