மீண்டும் அப்பாவாகிறார் கார்த்தி

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தியின் மனைவி […]

Continue Reading

நாய்க்கு டப்பிங் பேசிய சூரி

ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை […]

Continue Reading

திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்….

நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது: வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் எனது […]

Continue Reading

தத்ரூபமாக எடிட் செய்த ஓவியர்…. குவியும் பாராட்டுக்கள்

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சர்ஜா இறந்தபோது அவரது காதல் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழச்செய்தது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், பிரபல […]

Continue Reading

சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை?

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதன்பிறகு கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்தநிலையில் சிம்பு இன்னொரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, […]

Continue Reading

தீபாவளிக்கு வெளிவருகிறாள் ‘மூக்குத்தி அம்மன்’!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப், சைலன்ஸ், கபெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை […]

Continue Reading

மனதில் மகிழ்ச்சி வந்தாலே அழகும் வந்து விடும் – ராஷ்மிகா

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் நிலைக்க நடிப்பு, திறமை, அதிர்ஷ்டம் போன்றவற்றை விட அழகு முக்கியம். இதனாலேயே ஓராண்டுக்கு முன்பு வரை மாமிச உணவு சாபிட்டு வந்த நான் அதை நிறுத்தி விட்டேன். அழகாக இருக்க வேண்டும் என்றால் மாமிசத்தை விட்டு விட வேண்டும் என்று உணவியல் நிபுணர் கூறினார். அதனால் மாறி […]

Continue Reading

சினிமா படமாகிறது சக்திமான் தொடர்

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பானது. மொத்தம் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். சக்திமான் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதனை முகேஷ் […]

Continue Reading

என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – திரிஷா நெகிழ்ச்சி

நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். அதில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் மெளனம் பேசியதே மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, அடுத்தடுத்து அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999-ம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான். […]

Continue Reading

இந்தி நடிகர் சோனு சூட் செய்த உதவி….விருது வழங்கி கவுரவித்த ஐ.நா.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழைகளுக்கு உதவி செய்வது என இவர் […]

Continue Reading