வெற்றி, தோல்வி இரண்டும் சமம் – நடிகை சாய்பல்லவி

கொரோனா ஊரடங்கில் நடிகை சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு: “நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன். வெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் […]

Continue Reading

லாபம் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக லாபம் உள்ளது. இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் 2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடமை வந்தது. லாபம் படத்தில் சுருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோரும் உள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் அதை முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். லாபம் […]

Continue Reading

ஓ.டி.டி.யில் வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்து ஊரடங்கினால் திரைக்கு வராமல் உள்ளது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன்தாஸ், கவுரி கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தியேட்டருக்கு பதிலாக இணைய தளமான ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இதற்காக முன்னணி ஓ.டி.டி தளம் சார்பில் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. தியேட்டர் அதிபர்களோ ஊரடங்கு முடிந்ததும் […]

Continue Reading

பணம் முக்கியம் இல்லை கதை தான் முக்கியம் – ராஷி கண்ணா

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் […]

Continue Reading

வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார்

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் […]

Continue Reading

திரிஷா எடுத்த திடீர் முடிவு – குழப்பத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி […]

Continue Reading

நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி – கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் எனவும் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகரும் ஆன கமல்ஹாசன் அவர் ட்விட்டர் பக்கத்தில் இது […]

Continue Reading

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம் அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பேய் படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா ,மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இயக்கியிருக்கும் படம் காதம்பரி. இதைப் பற்றி இயக்குனரிடம் பேசிய பொழுது, தான் இந்த கதையின் தலைப்பை நயன்தாரா நடித்த […]

Continue Reading

கைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா

திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது பலரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படித்தான் சந்தீப் கிஷன் – இயக்குநர் சினிஷ் இருவரின் நட்பு. இருவருமே எந்தவொரு படத்திலும் இணைந்து பணிபுரியவில்லை என்றாலும் நெருங்கிய நண்பர்களாவே இருந்து வருகிறார்கள். அந்த நட்பு இப்போது திரையில் எதிரொலிக்கவுள்ளது. ஆம், இருவரது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கவுள்ளனர். ‘வெங்கடாதிரி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சந்தீப் கிஷன் தயாரிப்பு […]

Continue Reading

கணவராக வருபவரிடம் இந்த தகுதிகள் இருக்க வேண்டும் – நிவேதா தாமஸ்

கணவராக வருபவருக்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் என்று நடிகை நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் தர்பார், கமலஹாசனின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நிவேதா தாமஸ் அளித்துள்ள பேட்டி வருமாறு:- ‘’வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை. […]

Continue Reading