காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகம்.மற்றும் அனைவரின் முயற்சியில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என்றார். ஜாக்குவார் தங்கம் பேசும்போது, வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். நடிகர் ஆரியின் […]

Continue Reading

“ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழா

அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு  விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு   “ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு ..   ஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ்    முருகானந்தம்  இணைந்து தயாரித்துள்ள  படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்    தயாரிப்பாளர் கலைப்புலி […]

Continue Reading

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு

  இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும் படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான்  பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில், “கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, “இந்தப்படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப்பட்டிருக்கேன். […]

Continue Reading

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார். நான் பாடல் எழுத  வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார். இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது. அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன். ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார். படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,  “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது. இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.   நடிகை ரோகிணி பேசும்போது, “என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன். நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது. இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார். ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,  “இது எனது முதல் படம். இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள். 57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. இது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார். நடிகை இந்துஜா பேசும்போது, “சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தூய்மையான படைப்பாளி. இது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு. மூன்றாவது நன்றி ஆர்யாவுக்கு. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்த்து. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார். நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,  “இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன். நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று. இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது. இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும்கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது. ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவேதயாராக நிற்பார். இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். […]

Continue Reading

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் […]

Continue Reading

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் […]

Continue Reading

முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார்

முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை ” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை,  மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி […]

Continue Reading

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

  விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், […]

Continue Reading