உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான்

FRIENDS FILM FACTORY PRESS NEWS இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் D. இமான் அவர்கள். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் […]

Continue Reading

தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது

பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஹாரர் ஒரிஜினல் இணைய தொடரான ‘தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது.   தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது.   ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான […]

Continue Reading

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் […]

Continue Reading

குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் திரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க திரிஷா குதிரை சவாரி பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திரிஷா குதிரை சவாரி பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குதிரை சவாரி செய்வதுபோன்ற காட்சிகள் உள்ளது என்றும், இதற்காகவே அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் […]

Continue Reading

சோனுசூட்டுடன் சந்திப்பு: இந்தி படத்தில் விஷால்?

இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. அங்கு இந்தி நடிகர் சோனுசூட்டை விஷால் சந்தித்து பேசினார். அப்போது இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். அதனை விஷால் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, ராஜா, கோவில்பட்டி […]

Continue Reading

வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்…

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. சீதாராம ராஜூவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர். ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு, தற்போது கொமாரம் பீம் ஆக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டுள்ளனர். […]

Continue Reading

வெப் தொடராகிறது பிரபாகரன் வாழ்க்கை – விஜய் சேதுபதி நடிக்க அழைப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வெப் தொடராக தயாராக உள்ளது. இந்த தொடரை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வீரப்பன் வாழ்க்கை கதையை வனயுத்தம் என்ற பெயரிலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கை குப்பி என்ற பெயரிலும் எடுத்து வெளியிட்டார். தற்போது வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குகிறார். இதுதொடர்பாக ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியதாவது:- “விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறேன். இதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் […]

Continue Reading

பா.ஜனதாவில் இணைய போகிறாரா நடிகர் வடிவேலு…?

நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றாலே சிரிப்புதான் வரும்… அவர் காமெடி காட்சிகளை கொண்டு உருவாக்கிய மீம்கள் தற்போது உலக நடப்புகள் அனைத்திற்கும் பொருத்தமாக உள்ளன. அவரது மீம்கள் தான் சமூக வலைதளத்தில் அதிக அளவில் உலாவருகின்றன சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜனதா சட்டசபை தேர்தலுக்கு முன் தனது பிரசார பீரங்கிகளை தயார்படுத்தி வருகிறது.அதற்காக தற்போது நடிகர் வடிவேலுவையும் பா.ஜனதாவில் இணைக்கப்போவதாக […]

Continue Reading

வெப் தொடரில் ரம்யா பாண்டியன்

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. நடன […]

Continue Reading

காதல் திருமணம் செய்யும் அதர்வா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி […]

Continue Reading