பாலாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘விசித்திரன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது […]

Continue Reading

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக வாய்ப்பில்லை! – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். மாஸ்டர் படத்தில் விஜயுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் இயங்காததால், மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியீடு குறித்த கேள்விக்கு […]

Continue Reading

திரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி […]

Continue Reading

வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு சம்பளம் ரூ.80 கோடி

இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ஹிருத்திக் ரோஷனையும் புதிய வெப் தொடரில் நடிக்க […]

Continue Reading

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகைகள்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது. கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போது, இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் […]

Continue Reading

இரண்டு விருதுகள் பெற்ற குறும்படம் ‘மூடர்’

இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் ‘மூடர்’ ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் ‘மூடர்’. கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. :பிஹைன்வுட்ஸ்’ தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இக்குறும்படத்திற்கு பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு […]

Continue Reading

37 ஆண்டுகளுக்குப் பிறகு…மீண்டும் உருவாகும் முந்தானை முடிச்சு

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே […]

Continue Reading

விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருவார். இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். சமீபத்தில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட கேரளா பறந்த இவர்கள், அங்கிருந்து […]

Continue Reading

ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ் ஆகும் அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’

ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ் ஆகும் அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ கொரோனா பரவலால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் அடுத்த மாதம் 2-ந்தேதியும், சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதியும் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் அனுஷ்கா நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் […]

Continue Reading

சுந்தர் சி-யின் அடுத்த படம்…தீபாவளி பண்டிகைக்கு டி.வி.யில் வெளியிட திட்டம்?

ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், […]

Continue Reading