நேர்மையாளர்களின் சார்பில் வாழ்த்திய விவேக்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமலின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசனின் அறிவிப்புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில், “வருவது யாராக இருப்பினும் வாழ்த்துவது, மரபாக இருப்பினும் மகுடம் தரிக்க வைப்பது மக்களே. அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் […]

Continue Reading

நயன்தாரா நடிக்கும் அறிவழகன் படம்

சங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து சமீபத்தில் ‘குற்றம் 23’ படத்தை இயக்கினார். இதில் அருண் விஜய் நாயகனாகவும், மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது. இவர் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதில் நடிக்கும் மற்ற […]

Continue Reading

மெர்சல் தலைப்பை பயன்படுத்த தடை

அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று வெளியான இப்படத்தின் டீசர் சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது. மெர்சலுக்காக ட்விட்டரில் எமோஜி பெற்றது, இப்படத்தின் தலைப்புக்கு டிரேட் மார்க் வாங்கியது உள்ளிட்டவை, தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்திடாத ஒன்று. முதன்முதலாக அந்தப் […]

Continue Reading

மோடி திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினி ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ‘போருக்குத் தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரத் தயாராகிறார் என்று கூறப்பட்டது. தமிழருவி மணியன் இதற்கு முன் ஏற்பாடாக பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் ஏராளமான ரஜினி […]

Continue Reading

தன் காதல் பற்றி பகிர்ந்து கொண்ட மாரியப்பன் தங்கவேலு

இயக்குனர் செந்தில் செல்.அம்., திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் திரு.வி.க.பூங்கா. அழுத்தமான கிராமிய காதல், தாய் பாசம் ஆகியவற்றோடு தற்கொலை செய்வது மனித குலத்துக்கு எதிரான செயல் என்ற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். செந்தில் செல்.அம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சுவாதி சண்முகம் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த […]

Continue Reading

ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள் : கமல்ஹாசன்

சென்னைக்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அர்விந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசிக்கொண்டதாக கூறப்பட்டது. இருவரும் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் என்னை சந்திக்க கேட்டதையே பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் […]

Continue Reading

ரீஎண்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா

`நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து நஸ்ரியாவுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான `ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து `நையாண்டி’, `வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மலையாள பட உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் […]

Continue Reading

ஏ ஆர் முருகதாஸ் வெளியிடும் ஆவணப்படம்

பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் கபிலன் வைரமுத்து. இவரின் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார். பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை (MAP) என்ற மாணவர் இயக்கம் குறித்த ஆவணப்படம் தான் `இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற […]

Continue Reading

விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள்

அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் […]

Continue Reading

இயக்குநர் சசியின் அடுத்த பட டைட்டில்

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் […]

Continue Reading