விஜய் ஆண்டனியின் புதிய பரிணாமம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்ததாக பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்று வரும் நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் `காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியானது. இதில் ‘அண்ணாதுரை’ படத்தில் புதிய முயற்சியாக படத்தின் படத்தொகுப்பு பணிகளை விஜய் ஆண்டனியே […]

Continue Reading

சொன்னதை செய்து காட்டிய அனுஷ்கா

அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகமாக்கி குண்டானார். ‘பாகுபலி-2’ படத்துக்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்தார். என்றாலும், உடல் மெலியவில்லை. எனவே, ‘பாகுபலி-2’-ல் அனுஷ்காவின் உடல் தோற்றத்தை குறைத்து காட்ட கோடி கணக்கில் ‘கிராபிக்ஸ்’க்காக செலவு செய்தனர். பின்னர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தீவிர […]

Continue Reading

அருண்ராஜாவுக்கு கிடைத்த ஆதரவுக்குரல்

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள படத்தின் கதைக் களமும் இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பதால் அதுவே சினிமா ரசிகர்களிடையே சூடான செய்தியாக பரவி வருகிறது. இந்த செய்தி வெளியாகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தேவிகா பல்சிகர் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது […]

Continue Reading

சரஸ்வதி பூஜை விடுமுறையில் அறம் இருக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் `வேலைக்காரன்’ படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னமும் முடிவடையாததால் […]

Continue Reading

கதை கேட்டு மெளனமான விஜய்சேதுபதி

‘ரௌத்ரம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் – விஜய் சேதுபதி கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் படம் ‘ஜுங்கா’ ஜூங்கா படத்தைப் பற்றி இயக்குநர் கோகுலிடம் கேட்ட போது, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ […]

Continue Reading

லிப்ரா குறும்பட விழாவில் ’53’

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்படப் போட்டி ஒன்றை மிகப் பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. இந்த குறும்படப் போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரொடக்சன்ஸ். அவ்விதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 53 […]

Continue Reading

திகிலுடன் காதல் என்னோடு நீ இருந்தால்!

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் “என்னோடு நீ இருந்தால்”. இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – நாக.சரவணன், இசை – கே.கே, எடிட்டிங் – ராஜ்கீர்த்தி, கலை – எஸ்.சுப்பிரமணி, நடனம் – கேசவன், ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி, தயாரிப்பு […]

Continue Reading

புது லேண்ட் மார்க் செட் பண்ணிய ‘மெர்சல்’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சீரான இடைவெளியில் புதுப்புது தகவல்களை `மெர்சல்’ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கான எமோஜி டுவிட்டரில் வெளியிடப்பட்டது. தற்போது, தென்னிந்திய […]

Continue Reading

இயக்குநரான தயாரிப்பாளரின் முதல் பாடல்

அமைதிப்படை-2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. இதில் அரீஷ் குமார் கதாநாயகனாகவும், ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இயக்குனர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் இ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் […]

Continue Reading

ரூபாவாக அனுஷ்காவா? நயன்தாராவா?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கே சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ரூபாவின் இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். மேலும் அவரை அதிரடியாக பணியிடமாற்றமும் செய்தனர். ஆனாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரூபா, தான் கூறியது அனைத்தும் உண்மைதான் […]

Continue Reading