கதாநாயகனாக நடியுங்கள், திருப்தி ஏற்படும் : ரவியரசு

அஜித், சிறுத்தை சிவா வெற்றிக்கூட்டணியில் உருவாகி வெளிவந்த படம் விவேகம். இப்படம் எடுக்கப்பட்ட விதம் மற்றும் அஜித்தின் உழைப்பு பற்றி பலரும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தின் மீதான யூடியூப் சேனலில்  ப்ளு சட்டைக்காரர் செய்த விமர்சனம், ரசிகர்களிடையேயும், திரைப்படக் கலைஞர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  அவரது விமர்சனத்திற்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளையும், கண்டனங்களையும்  பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவியரசுவும் வீடியோவாக அவரது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில், “விவேகம் […]

Continue Reading

கோலிசோடா-2க்கு குரல் கொடுத்த கெளதம் மேனன்

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தை விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார். […]

Continue Reading

காஜல் முதன்முறையாக பங்கேற்கும் நிகழ்ச்சி

சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டன்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26 ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவரைத் தவிர 10 கதாநாயகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் நிகழ்ச்சியில் […]

Continue Reading

புன்னை நகர் அணியின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் புதிய யுக்தியுடன் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார்.  ஜி டி புரொடக்சன்ஸ் சார்பில் சேலம் ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.  “7 ஸ்டார் […]

Continue Reading

நடிகையாகிறார் யார் கண்ணன் மகள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் “யார்”. அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தான் கண்ணன். பின்னர் ‘யார் கண்ணன்’ என்ற பெயரில் பல படங்களை இயக்கினார். இயக்குனர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. அவர் எழுதிய “அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா” என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. சமீபத்தில் நடிகரான இவர் பல படங்களில் நடித்து […]

Continue Reading

ஜல்லிக்கட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம்

இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சி செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ஒரு கனவு போல”. அதைத் தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக “வீரத்திருவிழா” என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள். சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஹார்முக், இசை – இ எஸ் […]

Continue Reading

நயன்தாராவின் பாதி காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு இந்தியில் துணை நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு பழனி படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் படங்கள் குவிந்தன. கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது. சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார். தெலுங்கிலும் நிறைய படங்களில் […]

Continue Reading

நடிகர் செந்திலின் செகண்ட் ரவுண்டு

1990-களில் தனது காமெடியால் தமிழ் சினிமாவை கலக்கி முக்கிய இடத்தைப் பிடித்தவர் நடிகர் செந்தில். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக `பிஸ்தா’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் சிரிஷ் நடிக்கிறார். ‘அயல் ஜனல்லா’ என்ற மலையாள படத்தில் நடித்து புகழ் […]

Continue Reading

விவேகத்துடன் இணைந்த வேலைக்காரன்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விவேகம் ரிலீஸை அஜித் ரசிகர்கள் பல்வேறு […]

Continue Reading

மெர்சலில் மெர்சல் காட்ட இருக்கும் சந்தானம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக விஜய்யின் `மெர்சல்’ உருவாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை […]

Continue Reading