ரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களைத் திரட்டி அரசியலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக அறிவித்ததால் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் விவாதங்கள் நடத்தி தற்போது இறுதி முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார். கைவசம் உள்ள பட வேலைகளை முடித்து விட்டு இன்னும் ஒரு மாதத்தில் முழு நேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ரஜினிகாந்த் திட்டமிட்டு […]

Continue Reading

அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான், குறிக்கோள் அல்ல : கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், தமிழிலும் வெளிவர இருக்கும் சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். நானி, பவன்கல்யாண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னனி நாயகர்களின் திரைப்படங்களில் கைகோர்த்து வருகிறீர்கள். அடுத்து யாருடன் நடிக்க விருப்பம் என்று […]

Continue Reading

அமைதி காக்கும் அனுஷ்கா

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதுவும் இல்லை என்று ஆனது. பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ‌ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது ‘சாஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகிவிட்டார். அனுஷ்கா ‘பாகுபலி-2’-ல் நடித்தபோது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு […]

Continue Reading

தெலுங்கில் பாட்டெழுதிய மதன்கார்க்கி

தமிழ் சினிமாவில் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை உடையவர்களுள் ஒருவர் மதன் கார்க்கி. தமிழில் பல்வேறு படங்களில், பல்வேறு பாடல்களை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, முதன்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதேநேரத்தில் `ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் […]

Continue Reading

சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading

டுவிட்டரில் மெர்சல், உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மெர்சல். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது. தெறி படத்திற்கு அடுத்து, விஜய், அட்லி வெற்றிக்கூட்டணியில் மற்றுமொரு படம் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. […]

Continue Reading

ரஜினி என்னும் அபூர்வ ராகம்!

கர்நாடக மாநிலத்தில் ராமோஜி ராவுக்கும், ரமாபாய்க்கும் நான்காவதாக பிறந்த குழந்தை தான், சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் கொண்டாடப்படும், நாடு போற்றும் நடிகரான ரஜினிகாந்த். சிவாஜி ராவ் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், படிப்பை முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றிக் கொண்டே, மேடை நாடகங்களில் நடிக்கவும் செய்தார். திரைப்படத்துறையில் கால்பதிக்கும் நோக்கத்துடன், சென்னை வந்த அவருக்கு இயக்குநர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஒரு சில […]

Continue Reading

துருவ நட்சத்திரம் தோன்றும் காலம்?

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் விக்ரம் ஒரு உளவு அதிகாரியாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், சதீஷ், டிடி, வம்சி […]

Continue Reading

எல்லாக் கேள்விகளுக்கும் வீடியோவில் விளக்கமளித்த ஓவியா

தனியார் தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபலமான நபர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் அவரின் இயல்பான குணமும், குறும்புத் தனமும் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நடிகை […]

Continue Reading

மாறுவோம் மாற்றுவோம் : கமல்ஹாசன்

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்ற நம்மாழ்வார் கருத்துகளைப் பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து “கின்னஸ்” சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது. வரும் ஆகஸ்டு 26 ம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என […]

Continue Reading