படித்ததை செயல்படுத்த களமிறங்கிய சௌந்தரராஜா!

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்டு 11, சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் […]

Continue Reading

நடிகராக அவதாரமெடுத்த தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான். இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் […]

Continue Reading

விதியை நொந்து கொண்ட கங்கணா

இந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ‘மனிகர்னிகா’ படத்தில் நடித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் வீடு திரும்பினார். இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். “எனது சினிமா பாதையும், அதன் பயணமும் வித்தியாசமானது. இந்த விழாவுக்கு விமானத்தில் வந்த போது எனக்கு நடந்த பல வி‌ஷயங்களைப் பற்றி மனதில் அசை போட்டுக்கொண்டே வந்தேன். பல கேள்விகள் […]

Continue Reading

வைரலாகிறது, அமிதாப்பின் ஜாடை மொழி தேசியகீதம்!

மறைந்த வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ’ஜன கண மன’ என தொடங்கும் பாடல் நமது சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 27-12-1911 அன்று கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்தபோது முதன்முதலாக இந்தப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சவுதுராணி இந்தப் பாடலைப் பாடினார். பிரிட்டிஷ் முடியாட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “ஜன கன மண’ பாடல் இந்தியாவின் […]

Continue Reading

தங்கத்தில் உருவான டங்கல் கேக்

இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு துபாயில் இயங்கி வரும் இந்திய தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று இந்திய தேசியகொடி மற்றும் நடிகர் அமீர்கான் உருவத்துடன் ‘தங்க கேக்’ ஒன்றை தயாரித்துள்ளது. சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத்துகள்களால் பூசப்பட்டு உள்ளது. இந்த கேக்கில், ‘தங்கல்’ இந்தி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியான மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் சிறுமிகள், மற்றும் புல், கொட்டகை, மணல் தளம், […]

Continue Reading

விக்ரம் வேதா, பாகுபலி 2 வரிசையில் ஒரு கனவு போல

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பாக சி செல்வகுமார் தயாரிக்கும் படம் “ஒரு கனவு போல”. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு – அழகப்பன் என். இவர் […]

Continue Reading

மூளை பலத்தால் வெல்லும் சகோதர்கள்

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “திருப்பதிசாமி குடும்பம்”. இந்த படத்தில் ஜே.கே., ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலட்சுமி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஒய் எம் முரளி, இசை – சாம் டி.ராஜ், எடிட்டிங் – ராஜா முகமது, நடனம் – தினேஷ், ஹபீப், […]

Continue Reading

பூநூலே இல்லாத கலைஞானி நான் : கமல்ஹாசன்

  ‘முரசொலி’ நாளிதழின் பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், நடிகர் கமல்ஹாசன், ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர்(நிர்வாகம்) ஆர்.சந்திரன், கவிஞர் வைரமுத்து, ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆசிரியர் […]

Continue Reading

புஷ்பா புருஷனால் காணாமல் போன பரோட்டா சூரி

காமெடி நடிகர்கள் எல்லோரும் தற்போது ஹீரோவாக மாறிவரும் நிலையில், பரோட்டா சூரி மட்டும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிசியாக பணியாற்றி வரும் நிலையில், தன்னை இந்தளவுக்கு உயர்த்தியவர்களை நினைவுகூறும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘சினிமாவில் நான் இன்று பெரிய காமெடியனாக உயர்ந்ததற்கு சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன் தான் காரணம். அவரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். […]

Continue Reading

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாகும் தமிழ்ப்படம்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக அவரது இயக்கத்திலேயே புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இதுகுறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முதலில் “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேபோல் `பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை சிம்பு இயக்கி, நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், […]

Continue Reading