நடனத்துடன் நடிப்பையும் தொடரும் அனுஷா நாயர்

கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக் கொண்டிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதா நாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாய் அமைந்தது. அனுஷா நாயர் ‘மதுரை டு தேனி வழி […]

Continue Reading

காட்டு யானையின் தாகம் தீர்த்த படக்குழுவினர்

தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை, ஊர் பஞ்சாயத்துத் தலைவர் என்பதற்காக, தன் காதலியைப் பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாகக் கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’. இப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை […]

Continue Reading

சண்டக்கோழிக்காக சென்னையில் உருவாகும் அழகான மதுரை

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால். லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் […]

Continue Reading

ஸ்டைலிஷ் வில்லனாக தென்னிந்திய சல்மான்கான்

அழகு ஹீரோ, “தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர் ஷாம். கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ‘புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை. இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு […]

Continue Reading

எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கணும் : சாம்பார் ராசன்

சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் பார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக் கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம். ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரைத் தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன். இவர் தயாரித்து நடிக்கும் […]

Continue Reading

பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது : ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் நடித்த ‘சுறா’ படத்தை தன்னால் இடைவேளை வரைகூட பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தன்யாவின் இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பல வருடங்களுக்கு முன்னால் வெளியான ‘சுறா’ படத்தை தற்போது அவர் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர். தன்யா குறித்து ஆபாசமான விமர்சனங்களையும் முன் வைத்தனர். இதனால், அதிருப்தியடைந்த தன்யா ‘சுறா’ படத்தை குறித்த […]

Continue Reading

இயக்குனர் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் முருகானந்தம்

  சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் மணிவண்ணன். இவர் பல வெற்றி படங்களை இயக்கியும், வெற்றியடைந்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு. மறைந்த இயக்குனர் மணிவண்ணனை, ‘கதாநாயகன்’ படத்தின் இயக்குனர் முருகானந்தம் ஞாபகப்படுத்துவாதாக படவிழாவில் பலரும் பாராட்டியுள்ளனர். முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், சூரி, ஆனந்த் ராஜ், சரண்யா பொன்வண்ணன், அருள் […]

Continue Reading

இதயங்களைக் கொள்ளையடிக்கும் ஏ ஆர் ரகுமானின் ஒன் ஹார்ட்

தமிழைத் தவிர வேறு மொழிகளைப் பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர் தான் இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை […]

Continue Reading

விஷ்ணு விஷாலுக்கு குழந்தை முகம் : சரண்யா

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்ணுவிஷால் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெட்சுமண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் […]

Continue Reading

புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஈடுபாடு காட்டும் இசைஞானி

கிராமம், அதன் மண் மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. இவர் ஏற்கெனவே சில கன்னடப் […]

Continue Reading