‘பெப்சி’ போராட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். பயணப்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் விஷால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், படப்பிடிப்புகளைப் பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளைத் […]

Continue Reading

‘அருவாசண்ட’க்காக நடந்த அருவா சண்டையில் அருவா வெட்டு

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் “அருவாசண்ட”. ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின் மருமகனாக செளந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், செளந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த […]

Continue Reading

அமுதன் இயக்கும் இரண்டாவது தமிழ் படம்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களைக் கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்த படத்தைத் தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி, […]

Continue Reading

பெப்சி நாளை முதல் வேலைநிறுத்தம்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ‘பெப்சி’க்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்சினையை எழுப்பினார்கள். பயணப்படி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர்கள் தரப்பில் பயணப்படி அதிகமாக வழங்க ஒத்துக்கொள்ளாததால் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுபோல் வேறு சில படங்களின் படப்பிடிப்புகளின் போதும் சம்பளப் பிரச்சினை தொடர்பாக பெப்சி […]

Continue Reading

சந்தையில் வேலை செய்யும் பிஸ்தா

‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் சிரிஷ் தற்போது ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிராமப்புறம் சார்ந்த காமெடி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”ஒரு அருமையான கிராமப்புற காமெடி படத்தில் நடிக்கவுள்ளேன் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. ‘மெட்ரோ’ படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கவுள்ளார். இயக்கத்தில் ஆர்வமுள்ள அவர், ‘மெட்ரோ’ படத்தின் இறுதிக்கட்டப் […]

Continue Reading

தியேட்டர் சீட்டில் ரசிகர்களை கட்டி வைக்கும் சிம்பு

  சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.   அந்த தகவல்கள் குறித்து சிம்பு, “ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எனது அடுத்த படம் பற்றிய யூகங்களை நிறுத்துங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என்று தெரிவித்தார்.   இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த, முதற்கட்ட […]

Continue Reading

தெலுங்கிலும் அறிமுகமாகும் ‘மீசைய முறுக்(கு)’கிய நடிகர்

‘மீசைய முறுக்கு ’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன். பிறகு நண்பர்களின் உதவியுடன் […]

Continue Reading

கார்த்திக்கு எதிராக செயல்படும் சூர்யா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சாதனையும் படைத்தது. அனிருத் இசையில் “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, […]

Continue Reading

சான்றிதழ் பெற்ற மகிழ்ச்சியில் சர்வர் சுந்தரம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக உயர்ந்தவர் சந்தானம். காமெடியனாக அவர் வலம் வந்த போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் நடிப்பில் தற்போது `சர்வர் சுந்தரம்’ படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தில்லுக்கு துட்டு படத்தில் அவருடன் இணைந்து […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து விஜயின் மெர்சல்

இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் மெர்சல். அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிகட்டப் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் விநியோக உரிமையை எம்.கே.ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து மெர்சல் படத்தின் கேரள விநியோக உரிமையை `பாகுபலி’ படத்தைக் கைப்பற்றிய குளோபல் யுனிடெட் மீடியா நிறுவனம் ரூ.7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. கேரளாவில் அதிக தொகைக்கு விலை போன […]

Continue Reading