மாஸ் கூட்டணியை எதிர்பார்க்கும் வேதா ரசிகர்கள்

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர சமந்தாவுடன் `அநீதிக்கதைகள்’, த்ரிஷாவுடன் `96′, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் […]

Continue Reading

வெயிலை வெறுக்கும் சமந்தா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களைத் தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் […]

Continue Reading

நாளைய கலாம் விழா – எங்க வீட்டு விழா : ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்

ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் இந்தியாவின் 11வது குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சமாதி அருகே அமைக்கப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின் அந்த மணிமண்டப வளாகத்தில் முத்தமிழ் மையம் அமைப்பு சார்பில் நாளைய கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜிபி சந்தோஷ், ‘தப்பாட்டம்’ நாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், நடிகர் இமான் அண்ணாச்சி, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பட இயக்குநர் தயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக […]

Continue Reading

4 விதமான கதைகளுடன் துல்கர் படம்

விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடித்திருக்கிறார். ஸ்ருதி ஹரிஹரன், சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி உள்ளது. 4 விதமான கதைகளுடன் உருவாகியிருக்கும்  இப்படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள் 11 […]

Continue Reading

50 பேர் இணைந்து தயாரிக்கும் “நெடுநல்வாடை”

பி-ஸ்டார் புரொடக்சன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுநல்வாடை”. மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் “நெடுநல்வாடை”. “நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து சங்கமித்ராவிலும் கட்டப்பா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி. […]

Continue Reading

விஷாலுக்கு வந்த மிரட்டல் மெசேஜ்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் வெளியாகி உள்ளது. விஷாலின் கை, கால்களை வெட்டுவோம் என்று கொலை வெறியுடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டவர்களையும், தகவல் வெளியிட தூண்டியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு […]

Continue Reading

வளரும் நடிகரை சூப்பர் ஸ்டாராக வாழ்த்திய பாக்யராஜ்..!

கடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன். வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார். ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, மதுரை, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன். நெடுவாசலுக்கு சென்று மீத்தேன் […]

Continue Reading

அனைத்து மொழி மக்களாலும் ரசிக்கப்படும் கொச்சுண்ணி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கு ஏற்ப கதைகளும், கதையின் நாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு, புகழ்பெற்ற கேரளாவின் காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. ’36 வயதினிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றும் வரவேற்பு பெற்ற இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு `காயம்குளம் கொச்சுண்ணி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். […]

Continue Reading

எம்.ஜி.ஆர்-ஆக நடித்திருக்கும் ராணா

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ராணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நான் ஆணையிட்டால்’. இதில் ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ஜெகன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ராணா, ஜெகன், மயில்சாமி, சிவாஜி, இயக்குனர் தேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்… ஜெகன் பேசும்போது, எனக்கு இந்த படம் மிகவும் சர்ப்ரைஸ். இயக்குனர் தேஜா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரைப்பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளில் […]

Continue Reading