கருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய […]

Continue Reading

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் கைது

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, சமூக சேவகர். மேலும் இவர் லெனினிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கிப் படித்த சட்டக்கல்லூரி மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆதிதிராவிடர் விடுதியில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும், இறந்த மாணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி திவ்யபாரதி, உயிரிழந்த சக மாணவரின் சடலத்தை வாங்க […]

Continue Reading

மில்க் பியூட்டி தமன்னாவுக்கு கிடைத்த புதுப்பட்டம்

இந்நிலையில், தமன்னா தற்போது விக்ரம் ஜோடியாக `ஸ்கெட்ச்’, நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’ இந்தி ரீமேக், மற்றுமொரு பாலிவுட் படம் என பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே சர்வதேச அங்கீகார ஆணைக்குழு (CIAC) தமன்னாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த ஜுலை 22-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமன்னா டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். இதனை தமன்னா அவரது பேஸ்புக் பக்கத்தில், குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். இதற்கு முன்பாக உலக நாயகன் […]

Continue Reading

தடை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளைப் பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை […]

Continue Reading

அரசியலில் குதிக்கும் உதயநிதி

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் `பொதுவாக எம்மனசுல தங்கம்’. தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் உதயநிதி கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபனும், உதயநிதி நண்பனாக சூரியும் நடித்திருக்கின்றனர். மேலும் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டத்தில் நானா தான வீணா போன

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து அளிக்க படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்கிறது. “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் […]

Continue Reading

ப்ப்பா… யார்றா இது கெளதம்மேனன் படத்தில்

பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ள `புரியாத புதிர்’ படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது. மேலும் காயத்ரி `உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கெளதம்மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடிக்க […]

Continue Reading

கலாமின் நினைவுகளுடன் பயணிக்கும் இளைஞர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியிருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை ஆல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அதில், “கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இசை ஆல்பம் பற்றி பேசிய இயக்குனர் வசந்த், “காந்திக்குப் பிறகு ஒரு மாபெரும் தலைவரை இந்த தேசம் கண்டது. அவரது சிந்தனைகளை மறவாமல் இருக்க […]

Continue Reading

திலீப்புக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, திலீப் […]

Continue Reading

கோலிசோடா 2-ல் தொண்டன் கனி

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த படம், அனைவராலும் பாராட்டும்படி இருந்தது. இந்நிலையில், `கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகம் […]

Continue Reading