கோட்டைத் தாண்டி புகழைச் சூடு : கமல்

ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ள புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 4 புதிய அணிகள் புதிதாக இடம் பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர். தற்போது தமிழக அணியின் விளம்பரத் தூதராக கமல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு […]

Continue Reading

டுவிட்டரில் இருந்து விலகியது குறித்து குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட தனது கருத்துகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்து வந்தார். 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார். இதுபற்றி குஷ்பு கூறும்போது, ‘நான் டுவிட்டருக்கு அடிமையானது போல் சமீபகாலமாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. காலையில் எழுந்ததுமே கை செல்போனை தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன […]

Continue Reading

மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது. தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹவுஸ் ஓனரான லட்சுமி ராமகிருஷ்ணன்

வித்தியாசமான படைப்புகளால் பலரால் பாராட்டப்பட்டு வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர்’ என்னும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் அசோக் செல்வன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக உருவாக்க இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை பற்றி இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, “நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் […]

Continue Reading

பெண் போலீசாருக்கு திரைப்படத்தை சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் […]

Continue Reading

செப்டம்பரில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை இயக்கிய சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் இயக்குகிறார். இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ், விஜயகாந்த், […]

Continue Reading

2-வது ஆட்டம் படக்குழுவினருக்கு கிடைத்த பாக்கியம்

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை – கே எஸ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பு – பிரவீன் […]

Continue Reading

ப்ரியா ஆனந்தின் மனநிலையை மாற்றிய கூட்டத்தில் ஒருத்தன்

அசோக் செல்வன் – ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் `கூட்டத்தில் ஒருத்தன்’. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநர் ஞானவேல், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ப்ரியா ஆனந்த், […]

Continue Reading

இனியா நடிக்கும் மியா

‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மவுனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த இனியா தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘மியா’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி […]

Continue Reading

நிவின் பாலி இடத்தை பிடித்த அசோக் செல்வன்

அசோக் செல்வன் நடிப்பில் தற்போது உருவாக்கி இருக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். ட்ரிம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் அசோக் செல்வன், நடிகை பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் நிவாஸ், இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் ஞானவேல் பேசும்போது, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் […]

Continue Reading