உதவித்தொகை வழங்கிய சிவகுமார் அறக்கட்டளை

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 22 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள். விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக […]

Continue Reading

யூ-டியூபில் மீசையை முறுக்கும் டிரெய்லர்

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்திற்கு ஆதியே இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார். இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மிகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி வழங்கும் இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல […]

Continue Reading

பெற்றவர்களுக்கு பாடம் புகட்டும் ஓவியா

இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையைச் சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார். இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை […]

Continue Reading

யூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் சத்யா ட்ரைலர்!

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்யராஜ் வழங்கும் திரைப்படம் “சத்யா”. சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமால் ட்ரைலர் வெளியான பிறகு அனைவருக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது, சத்யா ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலர் ட்விட்டரில் பாராட்டி ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களால் கண்டுக்களிக்கப்பட்டு […]

Continue Reading

ரஜீஷ் இயக்கத்தில் ஹீரோவாகும் யமஹா

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து வரும் முதல் திரைப்படம் ‘வண்டி’. விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், எம்.ஆர். கிஷோர்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாந்தினி, ஜான் விஜய், அருள் தாஸ், சாமிநாதன், மதன் பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு வசனம் – அரசு, ஒளிப்பதிவு – ராகேஷ் நாராயணன், படத்தொகுப்பு – ரிசால் ஜெய்னி, இசை – சூரஜ் எஸ் குரூப், கலை – மோகன மகேந்திரன், பாடல்கள் – சினேகன், […]

Continue Reading

கொம்பனைத் தொட்ட விஜய்சேதுபதிக்கு நோட்டீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியைச் சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற 6 வயது காளை மிகவும் பிரபலமானதாகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு […]

Continue Reading

சமந்தாவின் அதிர்ஷ்டம் சாயிஷாவிடம்

நாகர்ஜுனா – அமலா தம்பதியின் மகன் அகில் அறிமுகமான படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. 2015-ல் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இப்போது தமிழில் ‘வனமகன்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக சாயிஷா அறிமுகமாகி இருக்கிறார். அவரது நடிப்பும், நடனமும் பாராட்டுப் பெற்றுள்ளன. அடுத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மீண்டும் தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் ஆர்வத்தில் சாயிஷா ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி […]

Continue Reading

அன்று அய்யா பிலிம் நியூஸ் ஆனந்தன், இன்று திரு.பெருதுளசி பழனிவேல்!!

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டவர் மரியாதைக்குரிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள். இவர் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த போது நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் […]

Continue Reading

பிரபுவின் புரொடக்‌ஷன் நம்பர் 3ல் நிவின்பாலி

நிவின் பாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த `சகாவு’ நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அவர் தற்போது `ரிச்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான ஜோமோன் டி ஜான் இயக்கத்தில் ‘கைரளி’ என்ற பிரம்மாண்டமான படத்தில் நிவின் பாலி நடிக்க இருக்கிறார். ஜோமோன் T ஜான், ‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் […]

Continue Reading

ஐக்கிய நாடுகள் இளைஞரணி மாநாட்டில் ஜல்லிக்கட்டு

ஜனவரி 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. சென்னை மெரினாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டமாக எழுச்சி பெற்றது. எந்த கட்சி சார்பும், அரசியல் கலப்பும் இல்லாமல் நடந்த இந்த போராட்டம் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. சந்தோஷ் இயக்கும் இந்த படத்தை அஸ்மிதா புரொடக்‌ஷன் சார்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிருபாமா, குருசரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வாஷிங்டனைச் சேர்ந்த ஜெயபால் இணைந்து தயாரித்திருக்கிறார். சு.கா.பூபதி […]

Continue Reading